ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி: கருணாநிதி



தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்ஸி நடப்பதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
இன்று காலை 10.38க்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு வந்தார். அங்கிருந்து நேராக சட்டப்பேரவையின் லாபிக்குச் சென்று கையெழுத்திட்டார். பின்னர் வெளியே வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.


நேற்று சட்டமன்றத்தில் போலீஸ் மானியக் கோரிக்கையின்போது கருணாநிதி குறித்து முதல்வர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், தான் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

இன்று காலையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடப்பதாகக் கூறினார் கருணாநிதி.

மேலும், நடக்கும் நிலவரங்கள் குறித்து ஆராய திமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் திமுகவினருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக இருந்துவரும் பிரச்னை குறித்து கேட்டபோது, இது குறித்து தற்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், எனக்கே சரியான வகையில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லை என்றார் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக