ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது!

ஊழல், கறுப்பு பணத்திற்கு எதிராக 9 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
மருத்துவமனையில் ராம்தேவை சந்தித்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர், அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை கைவிடும் படி கோரிக்கை விடுத்ததாகவும், இதையடுத்து அவர் பழச்சாறு அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக 9 வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ராம்தேவை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சத்வாலா ஆகியோர் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ராம்தேவின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அண்மைய நாட்களாக அவர் டேராடூனில் உள்ளஹிமாலயன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட போதும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு இன்னமும் இரண்டு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுப்பார் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இத்தகவல்களை மருத்துவமனையிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியிட்ட ஜனதா கட்சி  தலைவர் சுப்ரமணியம் சுவாமி, பாபாமா ராம்தேவ் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட இந்த நேரம், தமது சொத்துக்களை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் தலைவி சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சுவிற்சர்லாந்திற்கு சுற்றுலா விஜயம் செய்திருப்பார்கள் என தெரிவித்தார்.

ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா தெரிவிக்கையில், ராம்தேவின் உண்ணாவிரதம் முடிந்திருக்கலாம். ஆனால் ஊழலுக்கு எதிரான அவரது சத்யாகிரஹ போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக