நடிகை விஜயலட்சுமி தொடர்பான விவகாரத்தில் சீமான் மிகவும் தெளிவான தனது பதில்களை அளித்துள்ள நிலையிலும், தொடர்ந்து அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் வெகு வேகமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.
குறிப்பாக மதுரையில் திடீரென சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டுள்ளன. இது வரை யாருக்கும் அறிமுகமில்லாத ஒரு அமைப்பாக இருக்கும் ' இந்திய தேசிய மாணவர் பேரவை" என்ற பெயரில் பா.பால்பாண்டி என்பவர் பெயர் மற்றும் கைபேசி எண் ( 76761 23835 ) என்ற விபரங்களுடன் இந்த சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
சீமான் சென்னையில் தன்னைப்பற்றி வந்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் தலைமறைவானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறிப்பாக ஒரு தினசரி, "சீமான் இந்த புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதாக" தனக்கே உரிய பாணியில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த செய்தியை தான் பெரிய அளவில் சுவரொட்டி வடிவில் அச்சடித்து இந்த பால்பாண்டி என்பவர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளார். விஜயலட்சுமியின் புகாரையும், அதை தொடர்ந்து இயல்பாக பொலீசார் தங்களது பணிவரம்புக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் செய்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா தலைமையிலான அரசுடன் சீமானுக்கு விரோதம் ஏற்படுத்தும் நோக்கில், இந்த சுவரொட்டியில் "பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி" தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் குறித்து பொதுமக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது, "இந்த போஸ்டர்கள் அப்பட்டமாக சீமானின் மீதுள்ள தமிழ் உணர்வாளர்களின் நம்பிக்கையை குலைக்க திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள வேலை. தற்போது மக்கள் இது போன்ற கோயாபல்ஸ் பிரச்சாரங்களை எல்லாம் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இது நிச்சயமாக இந்த தேர்தலில் பாதிப்புக்குள்ளானவர்களின் வேலையாகத் தான் இருக்கும்" என்று தெரிவித்தார்கள்.
மேலும் சிலர் " தமிழகத்தில் ஒரு நிமிடத்திற்கு எத்தனையோ பாலியல் தொந்தரவுகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சுவரொட்டி ஒட்ட முன்வராத பால்பாண்டிகள் விஜயலட்சுமிக்கு மட்டும் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். " சீமானால ரொம்பத்தான் நொந்து போய்ட்டாங்களோ..? " என இன்னொருத்தர் கேலியாககத் தெரிவித்தார்.
இவை இவ்வாறிருக்க வழக்கம் போல் இந்த சுவரொட்டி குறித்தும் பொலீசார் விசாரித்து வருகின்றனர் என்பதே நமக்கு கிடைத்த தகவல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக