இதுக்கு மேல் வேகமாக பேசாதிர்கள் பாய் அம்மா கோபித்து கொள்வார்கள்
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் வருமாறு,
வரும் கல்வியாண்டில் மாவட்டத்தின் அனைத்து கிளை சார்பில் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்குதல், கிளைகள் தோறும் 4 மாதங்களுக்கு ஒருமுறை நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்துதல், ஜூலையில் நவாப் வாலஜா பள்ளிவாசல் சொத்தை மீட்க கரசேவை நடத்துவது,
கவர்னர் உரையில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிப்பது சம்பந்தமான அறிவிப்பு இல்லாததற்கு வருத்தம் தெரிவிப்பது,
தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையை கண்டிப்பது, அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது, பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுக்குள் வைக்க தவறிய மத்திய அரசை கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக