புதுடெல்லி: ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாஜவிலிருந்து நீக்கப்பட்ட மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் உமாபாரதி, இன்று பாஜவில் சேர்ந்தார்.
பாகிஸ்தான் தந்தை என போற்றப்படும் முகமது அலி ஜின்னாவை மதசார்பற்றவர் என பாஜ தலைவர் அத்வானி புகழ்ந்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உமாபாரதி, கட்சியிலிருந்து 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பாரதிய ஜனசக்தி என்ற புதிய கட்சியை தொடங்கினார். சில காலம் அக்கட்சியை நடத்தினார். இதற்கிடையில் அவர் மீண்டும் பாஜவில் சேருவார் என தகவல்கள் வெளியாயின. அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை உமாபாரதி பல முறை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் பாஜ தலைவர் நிதின் கட்கரி முன்னிலையில் நடத்தப்பட்ட விழாவில், அக்கட்சியில் உமாபாரதி இணைத்துக் கொள்ளப்பட்டார். விழாவில் பேசிய உமாபாரதி, ÔÔபாஜவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியிலிருந்து விலகியிருந்த 6 வருட காலத்தை மறக்க விரும்புகிறேன். நாட்டுக்கு சேவை செய்ய பாஜவை விட்டால் வேறு வழியில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்ÕÕ என்றார். உத்தரபிரதேச பாஜ பொறுப்பாளராக உமாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக