டமாஸ்கஸ்: சிரியாவில் மக்கள் தொடங்கிய போராட்டம் பல மாதங்களாக நீடிக்கிறது. அதிபர் பஷர் அல்-அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்கள் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜிஸ்ர் அல்-சுகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக ராணுவத்தினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது
. அல் அப்யத் என்ற இடத்தில் உள்ள அரசு கிடங்கில் 5 டன் டைனமைட் வெடிபொருளை திருடி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் மொத்தம் 120 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக