அரசு பொது மருத்துவமனை அருகில் சாக்குமூட்டையில் பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் நர்ஸ் பயிற்சி கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது.
இதன் வெளிப்புறம் பிளாட்பாரத்தில் உள்ள மின்சார பெட்டி அருகில் நேற்று காலை ஒரு சாக்குமூட்டை கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு நடந்து சென்றவர்கள் பூக்கடை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் திணித்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
நாக்கு வெளியே தள்ளிய நிலையில் இருந்தது. உடல் அழுகி காணப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அந்த பெண் நீல நிற சேலை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரை யாராவது கொலை செய்து சாக்கு மூட்டையில் திணித்து காரில் வந்து நேற்று முன்தினம் இரவு இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், 2, 3 நாட்களுக்கு முன்னதாகவே அவரை கொலை செய்து மறைத்து வைத்திருந்து விட்டு, இப்போது வீசி விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஏதாவது காவல் நிலையத்தில், 50 வயது மதிக்கத்தக்க பெண் யாரும் சில நாட்களுக்கு முன் காணாமல் போனது பற்றிய புகார் வந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பொதுமருத்துவமனை அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம் கிடந்துள்ளது, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக