ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2 மாதமாக பூட்டியிருந்த கதவு திறப்பு : பாபா அறையில் வைரம், வைடூரியம், கரன்சி?



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபுட்டபர்த்தி: இரண்டு மாதமாக பூட்டியிருந்த சாய்பாபாவின் அறை முன்னாள் நீதிபதிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. அதில் ஏராளமான தங்க, வெள்ளி நாணயங்கள், கரன்சி நோட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி கிராமத்தில் பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் அமைத்து ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தவர்
சத்ய சாய்பாபா. பக்தர்களுக்கு விபூதி வரவழைத்து தருதல், வாயில் இருந்து சிவலிங்கம் எடுத்தல் போன்ற சித்துவேலைகளையும் செய்து வந்தார்.

கல்வி, மருத்துவம், ஆதரவற்றோர் நலன் மற்றும் பொது கட்டிடங்கள், கட்டமைப்புகளுக்கு நிதி தருதல் உள்ளிட்ட தொண்டு பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக உலகம் முழுவதும் அவருக்கு பக்தர்கள் உள்ளனர். கடந்த மார்ச் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்ட சாய்பாபா, புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீசத்ய சாய் உயர்சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏப்ரல் 24-ம் தேதி இறந்தார். பிரசாந்தி நிலையத்தில் அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களும் லட்சக்கணக்கான மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

பிரசாந்தி நிலையத்தில் அவர் அருளுரை வழங்கிவந்த குல்வந்த் ஹாலில் ஏப்ரல் 27-ம் தேதி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.
பிரசாந்தி நிலைய வளாகத்தில் சாய் பாபா தங்கியிருந்த இடம் ‘யஜூர் மந்திர்’ எனப்படுகிறது. மிக நெருங்கியவர்களை தவிர வேறு யாரையும் சாய் பாபா இங்கு அனுமதித்தது இல்லை. கடந்த மார்ச்சில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் பூட்டப்பட்ட இந்த அறை இரண்டரை மாதத்துக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. கதவுக்கு சந்தனம், குங்குமம் வைத்து மாலைகள் போட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தீபாராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்ட பிறகு, அறையை திறந்தனர்.

சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் எஸ்.வி.கிரி, வி.சீனிவாசன், பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர், அறக்கட்டளை செயலாளர் சக்ரவர்த்தி, பாபாவின் உதவியாளர் சத்யஜித் ஆகியோர் அறைக்குள் நேற்று காலை 9.30 மணியளவில் சென்றனர். சாய்பாபா பயன்படுத்திய பெட்டக அறையின் சாவி, பிரசாந்தி நிலைய வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கி லாக்கரில் இருந்தது. அரை மணி நேரத்தில் பெட்டகத்தின் சாவியை வங்கி மேலாளர் சசிகுமார் எடுத்து வந்து, அறக்கட்டளை உறுப்பினர் கிரியிடம் கொடுத்தார்.

வங்கி ஊழியர்கள் பணம் எண்ணும் மெஷினுடன் வந்தனர். அங்கிருந்த பீரோ, லாக்கர் உள்பட அனைத்தையும் அதிகாரிகள் திறந்து பார்த்தனர். சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பகவதி, முன்னாள் நீதிபதிகள் ஏ.பி.மிஸ்ரா, வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் இவை திறக்கப்பட்டன. பக்தர்களுக்கு கொடுக்கும் தங்க நாணயம், சிறிய சிலைகள் போன்றவற்றை பாபா தனது பிரத்யேக லாக்கரில் வைத்திருப்பார். அதுவும் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அனந்தபூர் கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் சோதனையின்போது இல்லை. ரத்னாகரின் நண்பர் என்பதால் டிஎஸ்பி நரசிம்மலு மட்டும் உடனிருந்தார். பாபாவின் பெட்டகத்தில் ஏராளமான தங்கம், வெள்ளி நாணயங்கள், வைர, வைடூரிய கற்கள், சுவாமி சிலைகள், கரன்சி நோட்டுகள் இருந்ததாக கூறப்பட்டது. பணம் மற்றும் தங்கம், வெள்ளி, நவரத்தின கற்களை ஒவ்வொன்றாக வகைப்படுத்தி எண்ணும் பணியில் வங்கி ஊழியர்களுடன் சத்ய சாய் கல்வி நிறுவனத்தை சேர்ந்த 15 மாணவர்களும் ஈடுபட்டனர். வெளிநபர்கள், செய்தியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.பாபாவின் பெட்டகம் உள்பட யஜூர் மந்திர் வளாகத்தில் இருந்த பொருட்கள் பற்றிய விவரத்தை இன்று வெளியிட இருப்பதாக சத்ய சாய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக