லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த 110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிந்து வரும் குண்டு பல்பு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லிவர்மோர் நகரில் தீயணைப்பு அலுவலகம் உள்ளது. இங்கு 1901-ம் ஆண்டு 60 வாட் குண்டு பல்பு பொருத்தப்பட்டது. அதற்கு பிறகு, கட்டிட பராமரிப்பு வேலைகள், பெயின்ட் அடிக்கும் வேலைகள் பல முறை நடந்த போதும், இந்த பல்பு அகற்றப்படவில்லை. தற்போதும் எரிந்து வருகிறது.
110 ஆண்டுகளாக பீஸ் போகாமல் எரிவதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.1903-ம் ஆண்டில் சில காலமும் 1937-ல் ஒரு வாரமும் தொடர்ந்து 1976-ம் ஆண்டு வரையில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்ட நேரங்களில் மட்டும் இந்த பல்பு எரியவில்லை. மற்றபடி 110 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. நூறாண்டு கடந்த மின்விளக்குகளை பாதுகாக்கும் கமிட்டி ஒன்று லிவர்மோர் நகரில் செயல்படுகிறது. அதன் தலைவர் லின் ஓவன்ஸ் கூறுகையில், ‘‘குண்டு பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, அதிக வெப்பம் தாங்க முடியாமல் சிறிது காலத்தில் வலுவிழந்து உடைந்துவிடும். இதைத்தான் பீஸ் போகிறது என்கிறோம். இந்த பல்பு இத்தனை காலம் எப்படி பீஸ் போகாமல் எரிகிறது என்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது’’ என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக