ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கே போனது கொங்கு முன்னேற்ற கழகம்?!

கோவை: கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இந்த தேர்தலில் தி.மு.க உடன் கைகோர்த்து களம் கண்டது. ஆனால், போட்டியிட்ட எந்த தொகுதியில் வெற்றி பெறாமல் மண்ணைக் கவ்வியுள்ளது இக்கட்சி. மேலும் யாருக்கும் எந்தப் பாதிப்பையும் இக்கட்சி ஏற்படுத்தவில்லை.

கொ.மு.க

கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் கவுண்டர் இன பிரமுகர்கள் ஒன்றிணைந்து கொங்கு முன்னேற்ற கழகம் எனும் ஜாதிக்கட்சியினை ஏற்படுத்தி இருந்தார்கள். கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது தமிழகத்தில் 7 கோடி கவுண்டர்கள் இருக்கிறார்கள். நாம் கைகாட்டுபவர்கள்தான் அரசுக்கட்டிலில் அமர முடியும் என்றெல்லாம் இவர்களது முழக்கம் விண்ணைப் பிளந்தது. கடந்த லோக்சபா தேர்தலை முதல் முறையாக தனித்து சந்தித்து ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி வாக்குகளும் பெற்றார்கள்.

இழுபறி

இந்தத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் இழுபறி இருந்துகொண்டே இருந்தது. கடைசியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தனர் அதன் முக்கியஸ்தர்களான பெஸ்ட் ராமசாமியும், ஈஸ்வரனும். ஆனால், இந்த முடிவில் கட்சியில் சிலருக்கு அதிருப்தி நிலவியது. கட்சியை சுயலாபங்களுக்காக இவர்களிருவரும் அடமானம் வைத்துவிட்டதாக புகார் எழுந்தது. ஒன்றிரண்டு முக்கிய தலைகள் கட்சியை விட்டு வெளியேறினர்.

7 தொகுதிகள்

திமுக கூட்டணி தலைவரும் யாவரும் ஆச்சரியப்படும் வகையில் கொமுகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கினார். அதுவும், கவுண்டர்கள் பெருமளவில் வாழும் சூலூர், பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோபி, பெருந்துறை மற்றும் நாமக்கல் ஆகிய தொகுதிகளே வழங்கப்பட்டன. இதனால், குறைந்தது 4 தொகுதிகளிலாவது இவர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

படு தோல்வி

ஆனால் போட்டியிட்ட 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் அ.இ.அ.தி.முவிடமும், சூலுர் தொகுதியில் தே.மு.தி.கவுடனும் படுதோல்வி அடைந்துள்ளது கொங்கு முன்னேற்ற கழகம். கட்சியில் பெரும்பாலனவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கச் சொல்லியும் அதை காதில் வாங்காத தலைமையே தோல்விக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்தப் படுதோல்வி கொமுகவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக