யாழ் மாவட்டத்தில் உள்ள வடமராட்சி மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஊர்காவல்துறை கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சமயம், அவர்களை சிறீலங்கா கடற்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை (27) விரட்டியடித்துள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஊர்காவல்துறை மீனவர் சங்கத்தின் அனுமதியுடன் தாம் அங்கு பல வருடங்களாக மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளபோதும், சிறீலங்கா படையினர் தமிழ் மீனவர்களை அங்கு மீன் பிடிக்கவிடாது தடுப்பதுடன், தென்னிலங்கையில் இருந்து வந்துள்ள சிங்கள மீனவர்களை மீன் பிடிக்க அனுமதித்துள்ளனர்.
வடமராட்சி மற்றும் குருநகர் கடல் பகுதிகளில் மீன் வளம் குறைவாக காணப்படுவதால் தமிழ் மீனவர்கள் ஊர்காவல்துறை கடற்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி என்ற ஆயுதக்குழுவும் சிங்கள மீனவர்களின் அடாவடித்தனங்களுக்கு ஆதரவு வழங்கிவருவதாக தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக