ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்: மு.க.ஸ்டாலின்


பொய் வழக்கு போடுபவர்களையும், தூண்டுபவர்களையும் உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று நியாயம் பெறுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல், சர்வாதிகாரத்தால் திமுகவை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்றும், காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.



திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,

திருவாரூல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்வது போல் நாடகமாடி நிகழ்ச்சிகளை திசை திருப்ப அதிமுக முயற்சி செய்துள்ளது. காரணம் இல்லாமல் சாதாரண தொண்டரைக் கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம். அச்சுறுத்தல், சர்வாதிகாரத்தால் திமுகவை அழித்து விட முடியும் என்று ஒருபோதும் கனவு காண வேண்டாம். நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, கழகம் அழிந்ததாக வரலாறு கிடையாது.

திமுக பல்வேறு வெற்றிகளையும், தோல்விகளையும் கண்ட இயக்கம். இரண்டையும் ஒன்றாக பார்க்கக் கூடியதுதான் திமுக. சமச்சீர்க் கல்வியை அவசர அவசரமாக கொண்டு வரவில்லை. தலை சிறந்த நிபுணர்கள் மற்றும் பலதரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட பின்னரே கொண்டுவரப்பட்டது.
திமுக கொண்டுவந்த மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முடக்கி வரும் ஜெயலலிதா, அதில் ஒன்றான புதிய தலைமைச் செயலகம் சாதாரண மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 2006 முதல் 2011 வரையிலான நிலஅபகரிப்பு புகார்களை பெறும் ஜெயலலிதா, 2001 முதல் அவரது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிலம் அபகரிக்கப்பட்ட புகார்களை வாங்க மறுத்தது ஏன். திமுகவினர் மீது போடும் புகார்களை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதேசமயம் பொய் வழக்கு போடுபவர்களையும், தூண்டுபவர்களையும் உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று நியாயம் பெறுவோம்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை 70 கொலைகள், 220 வழிப்பறி கொள்ளைகள் நடந்துள்ளன. திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ள ஜெயலலிதா, இவற்றையெல்லாம் யாருடைய ஆதரவாளர்கள் செய்தது என்று கூறவேண்டாமா. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக