ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
நன்மைகளை விதை..
بسم الله الرحمن الرحيم



அஸ்ஸலாமு அலைக்கும்.
இறைவனின் சாந்தியும் சமதானமும்.அனைவரின்மீதும் உண்டாகட்டும்.

இஸ்லாமிய புதுவருடப்பிறப்பு.ஹிஜ்ரி 1432 முஹர்ரம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் 9:36 வசனத்தில் உலகை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை தெளிவுபடுத்தியுள்ளதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம். வருடத்தின் முதல் மாதமாக புனித முஹர்ரம் மாதம் இருப்பதையும் நாம் அறிந்தே வைத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

அனைத்து இஸ்லாமிய நல்லுள்ளங்களுக்கும் புதுவருடப்பிறப்பின் வாழ்த்துக்கள்.

ஏக இறைவன் படைத்த இப்பூமியில், மகத்துமிக்கவனாக மனிதனையும் படைத்தான். மற்ற அனைத்தையும் படைத்தவன் அவைகள் மனிதனின் உபயோகதிற்காகவே படைத்துள்ளான்.
அத்தனையும் அனுபவிக்கும் மனிதன் தன்னை படைத்த அவனை மறந்திடாவாறு, ஐந்துகடமைகளை உருவாக்கினான். அதனில்

முதன்மையானதாக இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று
அவனை முழுமையாக பின்பற்றவும்.

இரண்டாவதாக அவனை வணங்குவதற்காக ஐவேளை தொழுகையை ஏற்படுத்தியும்.

மூன்றாவதாக.
ரமளான் / நோன்பு.

புனித மாதமான ரமளானில் நோன்பென்னும் விரதமிருந்து மனிதன் தன்னுள்ளத்தையும் தன் உடலையும் தூய்மையாக்கிகொள்ளவும்.

நான்காவதாக.

ஜகாத் / ஏழைவரி. இருப்போர் இல்லாதோர்களுக்கு வாரிவழங்குவதையும்.

ஐந்தாவதாக.
இறுதிக்கடமையாய் புனிதப் பயணமான ஹஜ்ஜையும் நிறுவினான்.

அவன் மனிதர்களுக்கு முன் நன்மைகளையும் தீமைகளையும் கொட்டிக்குவித்து, அதனை பிரித்தறிக்கூடிய ஆறாவது அறிவையும் கொடுத்து படைத்துள்ளான்.படைதவன் வகுத்துக்கொடுத்த மிக அழகான நெறிமுறைகளையும். அதற்காக அவன் வழங்கிய வேதமான திருகுரானையும். அதனை நமக்கறிவிக்க அனுப்பிய திருநபியையும் வழங்கினான்.இறைவன் மிகவும் நுண்ணறிவு உள்ளவன். அவன் இவ்வுலகில் மனிதர்களை படைத்ததின் நோக்கத்தை அவர்கள் அறிந்து அவன் கூறியவற்றிக்கு செவிசாய்த்து. இன்பம் துன்பம் தானறிந்து, தீமைகள் தன்முன்னே அழகானதாக கண்முன்னே காட்சியளித்தபோதும் அவைகளைவிட்டு விலகியிருந்து,மூடப்பலக்கவழக்கங்களை துடைத்தெறிந்து,ஆணவ ஆகபாவம் விட்டொழித்து, தனக்குதரப்பட ஆறாவது அறிவால் சிந்தித்து செயல்பட்டு, நன்மைகளின் பக்கம் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்றுதான்.

எது நல்லது எது கெட்டது என பிரித்தறியும் பக்குவம் நம் அனைவரிடமுமே கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அறியத்தவறிவிடுபவர்களுக்காக பிறர்மூலம் அறிவுறுத்தபடுகிறது. அதனினைக்கொண்டும் நம் அறிவினைக்கொண்டும் நன்மையின்பக்கமே நம் முகங்களும். மனங்களும் சாய்ந்துகிடக்கட்டும். இறைவனின் சாந்தி என்றென்றும் நமக்கு கிடைக்கட்டும்..

இறைவா! என்பாவங்களை மன்னிதருள்வாயாக!
நல்லோர்களின் கூட்டத்தில் சேர்தருள்வாயாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக