ரயில் அந்த நிலையத்துக்குள் நுழைந்தபோது, சுனந்தோவை அருகில் நின்றிருந்த பெண் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு, ஓடிவிட்டார்.சுனந்தோ மீது ரயில் பெட்டிகள் ஏறியதில் உயிரிழந்தார். கொலையாளி பெண்ணை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்த போலீஸார் நேற்று அந்தப் பெண் கைதுசெய்தனர். 31 வயதாகும் அந்தப் பெண்ணின் பெயர் எரிக்கா மெனெண்டஸ். அவருக்கு எதிராக வன்மைக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. முதலில் சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நேரத்தில் தான் டைம்ஸ் சதுக்கத்தில் அமர்ந்திருந்ததாகவும், அதை வீயோவில் (சதுக்கத்தில் பதிவான) நீங்கள் பார்க்கலாம் என்றும் கூறினர்.பிறகு, சிறிது நேரத்தில் முஸ்லிம் ஒருவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்டேன் என்று ஒப்புக்கொண்டார். தனக்கு ஹிந்துக்களையோ, முஸ்லிம்களையோ அறவே பிடிக்காது. 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதில் இருந்து அவர்களை எனக்குப் பிடிக்காது. அவர்களை பார்த்தால் அடித்து உதைப்பேன் என்றவர், சுனந்தோவை முஸ்லிம் என நினைத்தே ரயில் முன் தள்ளிவிட்டதாக, எரிக்கோ கூறினார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 25 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று குயின்ஸ் மாவட்ட அரசு வழக்கறிஞர் ரிச்சர்டு பிரொன் தெரிவித்தார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக