கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 6 யானைகள் இறந்தன. இந்த விபத்தில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தார்.மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் வந்தபோது, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற யானை கூட்டம் மீது அந்த ரயில் மோதியது. இதில் இரண்டு குட்டிகள் உள்பட 6 யானைகள் இறந்தன.
ராம்பா மற்றும் குமா ரயில் நிலையங்களுக்கு இடையே, சுபலயா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததாக, பெர்ஹாம்பூர் கோட்ட வன அதிகாரி எஸ்.எஸ்.மிஷ்ரா தெரிவித்தார்.அதிவிரைவு ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டன என்று ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே செய்திக்குறிப்பும் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் அந்த ரயிலில் வந்த ரயில்வே ஒப்பந்த தொழிலாளர் ஒருவரும் உயிரிழந்தார். அவரது பெயர் ரஞ்ஜித் ஜெனா என்று பின்னர் கண்டறியப்பட்டது.அவர் எந்த சூழ்நிலையில் இறந்தார் என்பது தெரியவில்லை. அதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பரே. வணக்கம்
பதிலளிநீக்குஎனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்