பிராமணரின் எச்சில் மேல் உருண்டு புரளும் தலித்துகள்!
இந்தியாவில் இன்றும் தலை விரித்து ஆடுகின்ற சாதிக் கொடுமையின் ஒரு வடிவத்தை காட்டக் கூடிய பதிவு இது.
கர்நாடகாவில் கடந்த பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இச்சடங்கு இடம்பெற்று வருகின்றது.
இதை ஒரு சடங்கு என்று சொல்கின்றமைக்கு பதிலாக விசித்திர நடைமுறை என்றும் சொல்லலாம்.
உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுவோர் சாப்பிட்ட மிச்ச சொச்ச உணவு, உமிழ் நீர் ஆகியவற்றின் மேல் தாழ் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுவோர் உருண்டு புரள்கின்றனர், இதன் மூலம் தாழ் சாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பாவங்கள் நீங்கள் பெற்று நிறைவான வாழ்க்கை பெறுவார்கள் என்று நம்ப வைக்கப்பட்டு உள்ளது.
மங்களூரில் உள்ள 4000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குக்கே சுப்பிரமணிய கோவிலில் வருடாந்த நிகழ்வாக இது இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திலும் இது இடம்பெற்று வருகின்றது. வழக்கமாக இது கந்தசஷ்டி காலத்தில் இடம்பெறும்.
கடந்த முறை இது இடம்பெற்ற பிராமணர்களின் எச்சில் சாப்பாட்டு மிச்சங்கள் மீது தலித்துக்கள் 25000 பேர் உருண்டு புரண்டார்கள்.
இம்முறையை சட்டத்தின் உதவியுடன் இல்லாது ஒழிக்க முற்போக்குவாதிகள் முயல்கின்றனர். ஆயினும் இதற்கு தலித்துக்கள் சம்மதிக்கின்றார்கள் இல்லை என்று சொல்லப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக