கன்னியாகுமரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஒன்றரை வயது குழந்தையை எலி
கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வேத்துறை
அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தியாவில் ரயில்பயணம் செய்வது செலவு குறைவானதாக இருந்தாலும் அவ்வப்போது மூட்டைப்பூச்சி, எலி, கரப்பான் பூச்சி கடிகளுக்கு ஆளாகவேண்டியுள்ளது.
எலி கடித்து குதறியது
கன்னியாகுமரியிலிருந்து இருந்து சென்னை எழும்பூருக்கு திங்கட்கிழமை இயக்கப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் குடும்பத்தோடு எஸ்-4 பெட்டியில் பயணம் செய்தார்.
பெட்டியில் கீழ் படுக்கையில் மணிகண்டனின் ஒன்றரை வயது மகன் யஷ்வந்த் படுத்திருந்தான். ரெயில் வள்ளியூர் அருகே வந்த போது யஷ்வந்த் திடீரென அலறினான். அவனது வலது கை மூட்டு பகுதியை எலி கடித்து குதறி இருந்ததை பார்த்து பெற்றோர் கதறினர். வலியால் குழந்தை அழுததை பார்த்து மணிகண்டன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.
சரியான பதில் இல்லை
டிக்கெட் பரிசோதகரிடம் சென்று குழந்தையை எலி கடித்ததை கூறி மருத்துவ உதவி கேட்டபோது, அதற்கு அவர் தற்போது எந்த உதவியும் செய்ய முடியாது என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார். மேலும் எழும்பூரில் இறங்கும் போது நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் என்றும் கூறிவிட்டு சென்று விட்டார். பின்னர் குழந்தைக்கு திருநெல்வேலியில் முதலுதவி அளிக்கப்பட்டது. எஸ் 4 பெட்டியில் கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி தொல்லையும் இருந்ததால் பயணிகள் இரவு முழுவதும் தூங்காமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நீதிபதியே புகார் கொடுத்தும்...
ரயில்களில் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படும் படுக்கை விரிப்புகள் தூய்மையானதாக இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதியே புகார் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் ரயில்களில் சுகாதார சீர்கேடுதான் நிலவுகிறது. குறிப்பாக நீண்டதூர பயணம் செய்யும் எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் எலித் தொந்தரவும், பூச்சித் தொந்தரவும் அதிகம் இருக்கிறது என்பது பயணிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக