இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ பிளின்டாப் ஓய்வு பெற்ற பின் குத்துச்சண்டையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 34 வயதாகும் அவர் கடந்த 5 மாதமாக முன் னாள் உலக சாம்பியன் ஹேரி மெக் கியூகனிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். அதிக எடை அவருக்கு ஒரு பிரச்னையாக இருந்தது. ஆனால் அதை தீவிர பயிற்சியால் குறைத்தார். கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக வலம்வந்து 2 முறை ஆசஷ் தொடரை கைப்பற்றினார். இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவை கொண்ட பிளின்டாப் தற்போது குத்துச்சண்டை ரசிகர்களையும் தன்வசம் இழுத்துள்ளார். அவரது முதல் போட்டி மான்செஸ்டர் நகரில் நடந்தது. அவர் அமெரிக்க ஹெவி வெயிட் வீரர் ரிச்சர்டு டாவ்சனுடன் மோதி னார். 4 ரவுண்ட் கொண்ட இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது.
தொடக்கத்தில் அமெரிக்க வீரர் ஆதிக்கம் செலுத்தினார். பிளின் டாப் தடுப்பாட்டத்தை மேற்கொண்டார். 2வது ரவுண்டில் அமெரிக்க வீரரின் குத்து பிளின் டாபை நிலைகுலைய செய்தது. அவர் கீழே விழுந்தார். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அடுத்த 2 ரவுண்டுகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 39-38 என்ற புள்ளி கணக்கில் பிளின் டாப் வெற்றி பெற்றார். தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. போட்டி மைதானத் தில் 5 ஆயி ரம் ரசிகர்கள் பிளின்டா புக்கு ஆதரவாக குரல் கொடுத்து உற்சாகப்படுத்தினர். போட்டியை சக கிரிக்கெட் வீரர்களான மேத்யூ ஹோகார்டு மற்றும் ஹார்மிசன் ஆகியோர் பார்வையாளர் மாடத்தில் இருந்து உற்சாகப்படுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக