மின் கட்டணம் எவ்வளவு, மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிக்கும் திட்டம் தமிழத்தில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் 1 கோடியே 54 லட்சத்து 38 ஆயிரத்து 725 வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி நிறுவனங்கள், அலுவலம், தொழிற்சாலைகள் என்று பல இடங்களிலும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின்சார பயன்பாட்டு அளவை மீட்டர் மூலம் கணக்கிடப்படுகிறது.
அதன்பிறகு அதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, மின்சார வாரிய அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது. தற்போது நேரடியாக செலுத்த முடியாதவர்களுக்கு, ஆன் லைன் மூலமும் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய அவசர உலகில் மின் கட்டணம் எவ்வளவு, அதை கட்டுவதற்கான கடைசி நாள் ஆகியவற்றை ஞாபகம் வைத்து கொள்ள முடிவதில்லை. எனவே பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், மின்சார பயன்படுத்துவோருக்கு எஸ்எம்எஸ் மூலம் மின் கட்டணம் எவ்வளவு, அதை செலுத்த கடைசி நாள் ஆகியவை குறித்து அறிவிக்கும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய செல்போன் எண்ணை மின்சார அலுவலக பகுதி பிரிவு அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த பதிவு இன்று முதல் செய்யப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்த செல்போன் எண்களுக்கு, அவர்கள் பயன்படுத்திய மின் கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தையும், கட்டணத்தை செலுத்த கடைசி நாள் குறித்த விவரத்தையும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைப்போம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கார்டு முறையும் செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரிதான்.. முதல்ல கரண்ட கொடுங்கய்யா என்ற கமெண்ட் கவர்ன்மெட் காதில் விழுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக