இந்தியாவில் சுவர் ஒன்றை கண்டு விட்டால் போதும், அதன் மீது சிறுநீர் பாய்ச்சுவார்கள். இல்லையென்று சொன்னால் அச்சுவரோடு ஒட்டி குப்பை கூளங்களைப் போடுவார்கள்.
சிறுநீர் பாய்ச்சுகின்றவர்களிடம் இருந்து சுவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க புதுமையான முறை ஒன்று கையாளப்படுகின்றது. இம்முறையை சாதாரணமாக பங்களூரில் காண முடிகின்றது. கடவுள் துணைக்கு அழைக்கப்படுகின்றார்கள். சுவர்களில் கடவுளர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று ஓவியங்களுக்கு அருகில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு இருக்கின்றது.
அதே போல இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமய குறியீடுகளை ஒரே சுவர்களில் காண முடிகின்றது. சர்வ சமய இணக்கப்பாட்டை பிரதிபலிக்கின்றன போலும்? சிறுநீர் பாய்ச்சுகின்றவன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருப்பான் என்பது யாருக்கு தெரியும்?
சுவர்களில் அரச அறிவித்தல்கள் அல்லது தனிப்பட்ட அறிவித்தல்கள் எவைதான் இருந்தாலும் அவற்றுக்கு கீழ் சிறுநீர்த் துளிகளை பொதுவாக அவதானிக்க முடிகின்றது.
சிறுநீர் பாய்ச்சுகின்றவர்களிடம் இருந்து சுவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க புதுமையான முறை ஒன்று கையாளப்படுகின்றது. இம்முறையை சாதாரணமாக பங்களூரில் காண முடிகின்றது. கடவுள் துணைக்கு அழைக்கப்படுகின்றார்கள். சுவர்களில் கடவுளர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று ஓவியங்களுக்கு அருகில் கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டு இருக்கின்றது.
அதே போல இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமய குறியீடுகளை ஒரே சுவர்களில் காண முடிகின்றது. சர்வ சமய இணக்கப்பாட்டை பிரதிபலிக்கின்றன போலும்? சிறுநீர் பாய்ச்சுகின்றவன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருப்பான் என்பது யாருக்கு தெரியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக