டெசோ மாநாடு குறித்து எதிர்பார்த்ததைவிட அதிகளவில் எதிர்ப்பு கருத்துகள் வர துவங்கியுள்ள நிலையில், மாநாட்டை எப்படியும் வெற்றிகரமாக நடத்தி காண்பிக்க முழுமூச்சுடன் இறங்கியுள்ளார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் மாநாட்டு அரங்கம் அமையவேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி, பிரபல பந்தல் கான்ட்ராக்டர் ஒருவரிடம் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கம் பிரமாண்டமாக சினிமா செட்டிங் போல் அமைக்கப்படுகிறது. அரங்கத்தின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனையை, கருணாநிதி தாமே நேரில் வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு வெளியே இந்த மாநாடு தோற்றுவித்துள்ள நெகடிவ் கருத்துக்களை உடைப்பதற்காக, சுமாரான அளவில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த பிரசாரம், யாரையும் சென்றடைவதாக தெரியவில்லை.
இலங்கை தமிழ் அரசியல்வாதிகளை மாநாட்டுக்கு அழைத்துவரும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழர்களின் பெரிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை எப்படியாவது மாநாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று, கருணாநிதிக்கு நெருக்கமான இருவர் தலைகீழாக முயற்சிக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் அரசியல் செய்தாலும், அதன் தலைவர்கள் குடும்பத்துடன் வசிப்பது தமிழகத்தில்தான். கடந்த தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்ட சலுகைகளை பட்டியலிட்டு கூறி, “இவ்வளவு உதவிகள் செய்த நாம் நடத்தும் மாநாட்டுக்கு நீங்கள் வாராதிருப்பதா?” என்று கேட்கப்படுகிறது.
நாளையே தமிழகத்தில் ஒருவேளை ஆட்சி மாறி, தி.மு.க. மீண்டும் ஆளும்கட்சியாக வந்துவிட்டால், என்னாகும்? அப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழகத்தில் வசிக்க வேண்டும் அல்லவா? அதனால் அவர்கள் நெளிகின்றனர்.
இருவர் சடுதியாக ஐரோப்பா டூர் கிளம்பி விட்டனர். மற்றையவர்களும், தாய்லாந்து, கம்போடியா என்று எங்காவது செல்லும் இலங்கை அரசு குழுக்களில் இணைந்து கொள்ள முடியுமா என்ற முயற்சியில் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஒருவருக்கு இலங்கை தூதுக்குழுவுடன் மியன்மார் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. மற்றையவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில், கருணாநிதியுடன் சகவாசம் வைப்பதைவிட, இலங்கை அரசுடன் இணக்கமாக இருப்பது இவர்களுக்கு பலன் தரும்.
இவர்கள் எல்லோருமாக சேர்ந்து இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கப் போவதாக சொல்லப்படுகிறது.
நன்றி - விறுவிறுப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக