ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் தையல் ஊசி; பயணி வாயில் குத்தி ரத்தம் !

Published On: Friday 20 July, 2012
விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் இருந்த ஊசி குத்தி பயணி காயம் அடைந்தார். இதுபோல் 6 சாண்ட்விச்களில் ஊசி இருந்தது தெரிய வந்ததால் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட டெல்டா விமானத்தில் பயணிகளுக்கு சாண்ட்விச் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட ஜிம் டோஜெஸ் என்ற பயணியின் வாயில் ஊசி குத்தி ரத்தம் வழிந்தது
.

வலியில் அவர் துடித்தார். சாண்ட்விச்சில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் உதிராமல் இருக்க மேலும் கீழும் உள்ள பிரட் ஸ்லைசை குச்சியால் குத்தி வைப்பது வழக்கம். அந்த குச்சிதான் வாயில் குத்திவிட்டது என்று ஜிம் நினைத்தார். ஆனால், சாண்ட்விச்சை பார்த்த போது அதில் தையல் ஊசி போன்ற அளவில் இரும்பு ஊசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் இன்னொரு பயணியும் சாண்ட்விச்சில் ஊசி இருக்கிறது என்று புகார் கூறினார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் டெல்டா, சியாட்டில் மற்றும் அட்லாண்டா விமானங்களில் வழங்கப்பட்ட உணவில் 6 சாண்ட்விச்களில் ஊசி இருந்தது தெரிய வந்தது.

அது எப்படி வந்தது என்று அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ மற்றும் ஐரோப்பிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஊசி குத்தியால் பாதிக்கப்பட்ட ஜிம்முக்கு மருத்துவ பரிசோதனைகள் எச்ஐவி உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. விமான பயணிகளுக்கு கேட் கார்மெட் என்ற நிறுவனம் தான் உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது. பல்வேறு விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்யும் பிரபலமான நிறுவனம் இது. இந்நிறுவனம் வழங்கி சாண்ட்விச்சில் எப்படி ஊசி வந்தது என்று தீவிர விசாரணை நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக