பிரிட்டனை சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்ற சிறுமி, கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து தூங்கி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு மிட்லாண்டின் டெல்ஃபோர்டைச் சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்பவர் அரிதான நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல மாதங்களுக்கு தூங்கிக் கொண்டிருப்பார்கள். உலகில் ஆயிரத்தில் ஒருவர் தான் இந்த லெயின் லெவின் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
3 மாதங்களாக அந்த சிறுமி தூங்கியதால் 9 தேர்வுகளை அவர் எழுதவில்லை. மேலும் தனது பிறந்தநாளன்றும் அவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதுகுறித்து வெளியில் சொன்னால் மக்கள் நம்புவதில்லை. இது மிகவும் சிரமமாக உள்ளது என அந்த சிறுமி வருத்தத்துடன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக