ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நூற்றுக்கும் அதிகமான மொபைல் உள்ள கடையை உடைத்து ஒரு போனை மட்டும் திருடிச்சென்ற கொள்ளைக்காரன். அதிர்ச்சி + ஆச்சர்யத்தில் நெல்லை மாவட்ட போலிஸ்


வீடு மற்றும் கடைகளில் புகுந்து திருடச்செல்லும் கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் விதமாகவே தங்களது திட்டத்தை வகுப்பார்கள். அப்படி செல்லும்போது, எளிதாக எடுத்துச்செல்லும் வகையில் விலைமதிப்புள்ள பொருட்கள் என்ன கிடைத்தாலும் சுருட்டிக் கொள்வார்கள்.

கொள்ளையர்களை பொருத்தவரை பெரும்பாலும் ஆள்இல்லாத பூட்டியிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளையே குறிவைக்கிறார்கள். ஏனென்றால் ஆட்கள் இருக்கும் வீடு அல்லது கடையில் புகுந்து திருடுவது என்பது மிகவும் ரிஸ்க்கான விஷயம். ஆனால் பூட்டியிருக்கும் வீடு மற்றும் ககைளில் திருடுவது என்பது கொள்ளையர்களுக்கு மிகவும் எளிதான விஷயம்.
ஆகையால் பெரும்பாலான திருட்டுகள் பூட்டிருக்கும் இடங்களிலேயே நடக்கின்றன. அவ்வாறாக கொள்ளையடிக்கும் நேரத்தில் தடுக்க யார் வந்தாலும் எதிர் தாக்குதல் நடத்தும் வகையில் கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை தயாராக வைத்திருப்பார்கள். அப்படி நடக்கும் சமயத்தில் கொள்ளையர்கள் தப்பிச் செல்வதற்காக கொலை செய்யக்கூட தயங்க மாட்டார்கள்.
இதற்கு உதாரணமாக பல கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இப்படிப்பட்ட கொடூர கொள்ளையர்களின் மத்தியில் சில காமெடி கொள்ளையர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கொள்ளையடிக்க சென்று விட்டு சில சென்டிமென்ட் காரணமாகவோ, ஒரு பொருளின் மீதுள்ள விருப்பத்தின் காரணமாகவோ திருடாமல் வந்துவிடுவது, சில பொருட்களை மட்டும் வைத்துவிடுவது, ஒருபொருளை மட்டும் திருடிக்கொண்டு வருவது போன்ற சில ருசிகர சம்பவங்களை சினிமா படங்களில் மட்டுமே பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு ருசிகர சம்பவம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடந்துள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட செல்போன் கடைக்குள் புகுந்த ஒரு கொள்ளையன், அங்கு நூற்றுக்கணக்கான புது செல்போன்கள் இருந்த போதிலும், ஒரு செல் போனை மட்டும் திருடிச் சென்றுள்ளான். அந்த ருசிகர திருட்டு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் 5-வது தெருவை சேர்ந்தவர் மரியஅன்னராஜ். இவர் சங்கரன்கோவிலில் 2செல்போன் கடைகள் நடத்திவந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் சங்கரன்கோவில்- திருவேங்கடம் ரோட்டில் புதிதாக மற்றொரு செல்போன் கடையை திறந்தார். அந்த கடையில் புதிய மாடல் செல்போன்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருந்தன. நேற்றுஇரவு வழக்கம்போல் மரியஅன்னராஜ் தனது செல்போன் கடைகளை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்றுகாலை, திருவேங்கடம் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட மரியஅன்னராஜின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் கதவு திறந்து கிடந்தது. இதனை பக்கத்து கடையை சேர்ந்தவர்கள் பார்த்து மரிய அன்னராஜூக்கு தகவல் தெரிவித்தனர். 
உடனே அவர் தனது கடைக்கு வந்து உள்ளேசென்று பார்த்தார். கடையில் இருந்த செல்போன்கள் திருட்டு போயிருக்கிறதா? என்று பார்த்தார். அப்போது அவரது கடையில் இருந்த ரூ7,500 மதிப்புள்ள ஒரு செல்போன் மட்டும் திருட்டு போயிருந்தது. ஏதோ ஒரு கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் மரிய அன்னராஜின் கடைக்குள் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே புகுந்து, ஒரு செல்போனை மட்டும் திருடிச் சென்றுள்ளான்.
நூற்றுக்கணக்கான புதிய செல்போன்கள் இருந்த நிலையில் ஒரு செல்போனை மட்டும் கொள்ளையன் திருடிச்சென்றிருப்பது மரிய அன்னராஜூக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கரன் கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலிபுல்லா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களும், ரேகைகளும் சேகரிக்கப்பட்டன. ஒருசெல்போன் ரோட்டிலோ அல்லது பொதுஇடத்திலோ கேட்பாரற்று கிடந்தால், சாதாரண மனிதன் கூட அபேஸ் செய்யும் இந்த காலத்தில், நூற்றுக்கணக்கான புதிய செல்போன்கள் இருந்த கடைக்குள் புகுந்துவிட்டு, ஒரேஒரு செல்போனை மட்டும் கொள்ளையன் திருடிய சம்பவம் போலீசாரையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதுதொடர்பாக சங்கரன் கோவில் போலீசார் வழக்குப்பதிந்து ஒரு செல்போனை மட்டும் திருடிச்சென்ற கொள்ளையன் யார்? என்று துப்பு துலக்கி தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக