ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பழந் தமிழர்களின் கடல்பயணத்தில் மிக முக்கியமான உணவாக இருந்ததில் மொச்ச கொட்டை மிக முக்கிய இடத்தை வகித்து இருக்கிறது

 பழந் தமிழர்களின் கடல்பயணத்தில் மிக முக்கியமான உணவாக இருந்ததில் மொச்ச கொட்டை மிக முக்கிய இடத்தை வகித்து இருக்கிறது 
நவ தானியங்களில் ஒன்றான மொச்ச கொட்டையை பற்றி மருத்தவ வெண்பா பாடல்களும் இருக்கின்றன 




இன்றும் தென் அமெரிக்காவில் அதன் பெயர் பள்ளர் பீன்ஸ்

பள்ளர் மள்ளர் என்ற பெயரை கொண்ட மக்கள் பல கடற்கரை நாடுகளில் உள்ளார்கள்

தென் இந்தியா தீபகற்ப மக்களின் கடல் பயணத்தில் மூலமாக , பழந் தமிழர்களின் மிகவும் அவசியமான உணவு பொருள்கள் உலக கடற்கரை நாகரிகத்தில் ஊடறுவி உள்ளதை உணர முடிந்தது

இந்தியா உலக அளவில் இன்றும் பீன்ஸ் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது
முதலிடம் பிரேசில்

பொதுவாக இமயமலை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிள் விளைந்தது என்று வரலாறு சொன்னாலும்
தமிழகத்தில் வேளாண்மையை முக்கியமாக கொண்டு இருக்கும் பள்ளர்கள் உலகிற்கு வேளாண்மையை கொண்டு சென்றதற்கு
தரவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன

குறிப்பாக ஐரோப்பிய மற்றும் தென் மெரிக்காவில்

இதை பற்றிய நானும் இணைந்த ஆய்வுகள் தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் நண்பர் செல்வாவுடன் பெரிய அளவில் நடந்து வருகிறது

பொதுவாக நாம் மன்னர்களின் பெருமைகளை தான் பேசி வருகிறோம்

என் ஆய்வின் நோக்கமே மக்கள் தொடர்பானது

இப்பொழுது முக்கியமான கேள்வி

தமிழர் என்பவர் யார்

நிலத்தாலா அல்லது மொழியும் ஒரு காரணமா

தமிழர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களில் வசிக்கும் போது அவர்களின் தலைமுறைகள் அந்த தட்ப வெப்ப இடத்திருக்கு ஏற்றார் போலவோ அல்லது இன கலப்பால் தங்கள் அடையாளத்தை இழக்க தொடங்கினார்கள் அவர்கள் சென்ற இடத்தின் மொழிகள் கூட அவர்களை ஈர்த்தது

ஆனாலும் பழந் தமிழ் மொழியின் கூறுகள் பிற மொழிகளில் இருப்பதை குறிப்பாக கடற்கரை மக்களிடம் இருப்பதை தெளிவாக உணர முடிகிறது

இன்று தமிழகத்தில் கூட மக்கள் தங்கள் அடையாளத்தை இழக்க தொடங்கி விட்டார்கள்

உலக மயமாக்கலின் தடயம் நன்கு தெரிகிறது

அதே போல் தமிழக மக்களின் பண்பாட்டு எச்சங்கள் உலக கடற்கரை நாகரிகத்தில் பல வேறு முறைகளில் தெரிகிறது

என் ஆய்வில் வெளிவரும் பல செய்திகள் எனக்கே வியப்பை தந்து மேலும் மேலும் தேட வைக்கின்றது

ராஜபாளையத்தில் பருத்தி தொழில் செய்யும் ராஜுக்களை பற்றி எழுதி வருகிறோம் அவர்கள் கஜபதி மன்னர்கள் காலத்தில் ஆந்திரா ஒரிசா எல்லையில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்று வரலாறு கூறுகிறது

அங்கேயே ஆளுன்மையில் இருந்து பின்னர் இன்றும் வேளாண்மையில் இருக்கும் பள்ளர் சமுகத்தை பற்றி யாரும் எழுதுவதில்லை

குடும்பர் ,பள்ளர் , மள்ளர் என்ற மக்கள் சார்பான வரலாற்றை தென் தமிழகத்தில் தேடும் போது தான் நாம் இது வரை அரசர்களை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து இருக்கிறோம்

அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களை பற்றி அல்ல என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக