ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரே சிறையில் அடைக்கபட்ட பின்லேடனின் 3 மனைவிகள். சிறைக்குள் சண்டையிடுவதாக ஊடகங்கள் செய்தி..



அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு 10 மாதங்கள் உருண்டோடிய நிலையில் உயிரோடு உள்ள அவரது மனைவிகள் சிறைக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்கப்படையினரால் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடைய 3 மனைவிகளும், 8 குழந்தைகளும் பிடிபட்டனர். இவர்களில் மூத்த மனைவியான சவூதி அரேபியாவைச் சேர்ந்த 61 வயது கைரிஷா சபீர் என்பவர்தான் பின்லேடன் பதுங்கி இருப்பது குறித்து அமெரிக்காவிடம் காட்டி கொடுத்தார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசாமாவுக்கு மொத்தம் 5 மனைவிகள் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு பின்லேடன் தனது இளைய மனைவி ஏமனைச் சேர்ந்த அமல் அகமத் அப்துல் பதா என்பவருடன் நெருக்கமாக இருந்ததே காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் புலனாய்வுப்பிரிவின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த 3 மனைவிகளும் சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அனைவரும் சிறையிலடக்கப்பட்டனர்.
ஆனால் பின்லேடனை காட்டிக் கொடுத்த விவகாரத்தில் மூத்த மனைவியின் மீது இளைய மனைவி ஆத்திரம் அடைந்து சிறைக்குள்ளேயே தகராறில் ஈடுபட்டதாகவும் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசியதுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக