மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகம்மத் நஷீட் அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய தாக்குதல் காரணமாகப் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருடன் இவரது ஆதரவாளர்கள் பலரும் காயமுற்றுள்ளனர். முகம்மத் நஷீடின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்ட்ட எதிர்ப்புப் பேரணியின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதனை முகம்மத் நஷீடின் மாலைதீவு ஜனநாயகக் கட்சி இன்று அறிவித்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது அவர் பாதுகாப்பாக தனது வாசஸ்தலத்துக்குத் திரும்பியுள்ளார் என்றும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மஞ்சள் நிற சட்டையில் இருப்பவரே முன்னாள் ஜனாதிபதி முகம்மத் நஷீட் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக