ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

முகத்தில் அகோரமாக வளரும் உரோமத்தினால் திண்டாடும் 23, 18, 16 வயதுடைய சகோதரிகள் ( அதிர்ச்சிகர படங்கள் இணைப்பு)

இந்தியாவில் புனே நகருக்கு அருகிலுள்ள கிராமமொன்றில் வசித்து வரும் உடன்பிறந்த சகோதரிகள் மூவர் அகோரமான உரோம வளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது உடல் முழுதும் அளவுக்கடந்த உரோமங்கள் வளர்ந்து இவர்களது அழகையே பாதிப்படையச் செய்துள்ளன.
 
சவீதா (வயது 23), மோனிஷா (வயது 18), சாவித்திரி சங்க்லி (வயது 16) ஆகிய சகோதரிகளின் தலை முதல் கால் வரை அடர்த்தியான உரோமங்கள் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றன. அவர்களது கண் இமை பகுதி, மூக்கு, மற்றும் முகம் ஆகியப் பாகங்களிலும் உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன.
முகத்தில் வளர்ந்துள்ள உரோமங்கள் ஆண்களுக்கான தாடியை போன்று காணப்படுகின்றது. இந்த அசுர வேக உரோம வளர்ச்சியானது அவர்களது தந்தையின் மரபணு மூலமான விளைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. இக்குடும்பத்தில் மொத்தம் 6 சகோதரிகள். இவர்களில் மூவருக்கே இப்பாதிப்பு உள்ளது.
 
இந்த உரோமங்கள் வளர்வதை தடுப்பதற்கு ஒருவகை கிரீம்களை இவர்கள் உபயோகித்தாலும் குறுகிய நாட்களுக்குள் உரோமங்கள் மீண்டும் வளர்ச்சியடைந்துவிடுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இவர்களின் தந்தைக்கும் இப்பாதிப்பு இருந்தது. இவர்களின் தாயாரான அனிதா அவரின் 12 ஆவது வயதில் திருணம் செய்ய நிர்ப்பந்திக்ப்பட்டாராம். திருமணம் நாள் வரை மணமகனை தான் பார்க்கவில்லை எனவும் அவருக்கு இப்பாதிப்பு இருந்தது குறித்து தனக்குத் தெரியாது எனவும் அனிதா தெரிவித்துள்ளார்.
 
திருமணம் என்பது எமக்கு பொருத்தமான தேர்வல்ல. இது நடப்பதற்கு வாய்ப்பில்லை. இவ்வாறு தொடர்ந்து எமது உடலில் உரோமங்கள் வளர்ந்துகொண்டிருந்தால் யார் எம்மை திருமணம் செய்துகொள்வார்கள் என்று அச்சகோதரிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
 
இது 100 கோடி பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் எனவும் இதை குணப்படுத்துவதற்கு ஒருவருக்கு  மூன்றரை லட்சம் இந்திய ரூபா தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
எனினும் இப்பணத்தை திரட்டிக்கொள்வதற்கு தம்மால் முடியாது என இக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக