ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கலோ பொங்கல் !





தீயவைகளை தீயிட்டு நல்லவைகளை பொங்கவைத்து விதைத்தவைகளை அறுத்தெடுத்து நல்ல எண்ணங்களை மீண்டும் விதைத்து சாதி, மதங்களை தூர வைத்து நம் இனத்தவரை அருகில் வைத்து அன்பையும், பண்பையும் பரிமாறிக்கொண்டு மனமார வாழ்த்திட ஒன்று கூடி ஒரே குரலுடன் பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல் ! பொங்கலோ பொங்கல் ! இந்த அருமையான நாளில் உங்களை வாழ்த்துவது கூட மற்றற்ற மகிழ்ச்சியே பொங்கும் பொங்கலை போல் பொங்கட்டும் இன்பங்கள் பொங்கல் நல் வாழ்த்துக்கள் தமிழனாய் எழுந்து நிற்போம் ! தமிழனாய் நிமிர்ந்து நிற்போம் ! உங்கள் தோழன் தமிழ்மகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக