ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தியாவில் தேனிலவு… டாப் 10 சுற்றுலா பிரதேசங்கள்!


honeymoon-1
ளமையின் மறக்க முடியாத பயணம் தேனிலவுப் பயணமாகத்தான் இருக்கும். பொதுவாக வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்குப் பறப்பார்கள்.
ஆனால் அவற்றை விட சிறந்த பிரதேசங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன.
இதோ அவற்றில் சிறந்த பத்து… உங்கள் கவனத்துக்கு:


1. லட்சத்தீவுகள்
couple-beach
லட்சத் தீவுகள்
இந்தியாவின் யூனியன் பிரதேசம். அமைதியும் அழகும் ஆரோக்கியமும் நிரம்பித் ததும்பும் சொர்க்கத் தீவு இது.
2. அந்தமான் – நிகோபார் தீவுகள்
ஹனிமூன் கொண்டாடுவதற்கென்றே இயற்கையால் படைக்கப்பட்டதோ எனும் அளவுக்கு ரம்மியமான ரொமான்ஸ் தேசம் இது!
அந்தமான்
அந்தமான்
3. கோவா
சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், கோவா – ஒரு உல்லாசபுரி. திகட்டத்திகட்ட பொழுது போக்கு, திகட்டாத சந்தோஷம்…
600_goa_1
கோவா
4. கோவளம்
கேரளாவின் கோவளம் கடற்கரை பன்னாட்டு கலாச்சாரங்களின் சங்கமும். மிக அழகிய, பாதுகாப்பான சுற்றுலா மையம்.
சுத்தமான இடம். செலவும் குறைவுதான். ஒருமுறை இங்கு வந்தவர்கள், தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை வந்து செல்வதையும் பார்க்கலாம்.
5. டார்ஜிலிங்
டார்ஜீலிங்
டார்ஜீலிங்
இதமான பருவநிலை, இதயம் வருடும் இயற்கைச் சூழல் என மிக ரம்மியமான மலைப் பிரதேசம். இமய மலையின் அடிவாரம்… மேற்கு வங்க மாநிலத்தின் வட பகுதியில் உள்ளது.
கோவளம்
கோவளம்
6. ஜோத்பூர்
ராஜ தேனிலவு என்பார்களே… அதை அனுபவிக்க ஜோத்பூருக்கு செல்ல வேண்டும். வசதி இருந்தால் அரண்மனையின் அந்தப் புரத்திலேயே கூட ஹனிமூனை வைத்துக் கொள்ளலாம்.
கூர்க்
கூர்க்
7.கூர்க்
இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று வர்ணிக்கப்படும் அருமாயான மலைவாசஸ்தலம் கூர்க். கர்நாடகத்தின் மொத்த
ஜோத்பூர்
ஜோத்பூர்
இயற்கையழகையும் அடக்கி வைத்திருக்கும் அழகுப் பிரதேசம்.
8. ஊட்டி
ஆயிரம் ஊருக்குப் போனாலும் அம்மா வீட்டின் இனிமையும் நிம்மதியும் கிடைக்காதல்லவா… அந்த உணர்வைப் பெற ஊட்டிக்கு வாங்க.
ஊட்டி
ஊட்டி
நம்ம ஊர், நம்ம மனிதர்கள், பாதுகாப்பான- ரம்மியமான சூழல், வாய்க்கு ருசியாக உணவு… அதுவும், டிசம்பர் மாத பனி சீஸனில் இங்கு நள்ளிரவில் கிறிஸ்துமஸ் – புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்ப்பதில் உள்ள சுகமே தனி.. ஒரு முறை கொண்டாடித்தான் பாருங்கள்!
சிம்லா
சிம்லா
9. சிம்லா
அமைதி, அழகு தவழும் அழகிய பனிப்பிரதேசம். இமாச்சலப் பிரதேசத்தின் தலை நகரம்.
10. ஸ்ரீநகர்
ஸ்ரீநகர்
ஸ்ரீநகர்
நியாயமாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் இடம் ஸ்ரீநகர்தான். இன்றைக்கும் பூலோகத்தின் சொர்க்கம் என்றுதான் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரை அழைக்கிறார்கள். தீவிரவாதம் தலைவிரித்தாடும் மாநிலம் என்பதால் மட்டுமே இந்த வரிசையில் கடைசி இடம் பெறுகிறது. கொஞ்சம் ரிஸ்க்கோடு ஹனிமூன் கொண்டாட விரும்பினால் இங்கு வரலாம்.
என்ன… இந்த பத்து இடத்துக்குமே போய் வந்தா என்னன்னு தோணுதா… வசதி வாய்ப்பு இருந்தா அப்படியும் செய்யலாம்… மறக்க முடியாத தேனிலவா அமையும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக