நமது தலைநகர் டெல்லி, புது டெல்லி, மற்றும் பழைய டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி என்றழைக்கப்படும் புரதான சின்னங்கலடங்கிய, அதாவது செங்கோட்டை, குதுப்மினார், ஜாமா மசூதி போன்ற வரலாற்று புகழ்பெற்ற கட்டிடங்கள் அடங்கிய பழைய டெல்லியில் பெரும்பாலும் வசிக்கும் இஸ்லாமியர்கள் வறுமைக்கோட்டிற்கு மிகவும் கீழே இருப்பவர்களை காணப்படுகிறார்கள். அவர்களிடம் இஸ்லாமிய பெயர்கள் மட்டுமே இருக்கின்றது.. மற்றபடி அவர்களது பழக்க வழக்கங்கள் போதைக்கு அடிமைப்பட்டவர்களாய் காணப்பப்டுகிரார்கள். ஜாமா மசூதி, செங்கோட்டை போன்ற சுற்றியுள்ள பகுதிகளை வசிக்கும் பெரும்பான்மையான இஸ்லாமிய மக்கள், ரிக்ஷா, ஆட்டோ, ஓட்டும் தொழிலாளர்களாகவும், சுமைதூக்கும் தொழிலாளர்களாகவுமே இருக்கிறார்கள்.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கு வருகை தந்த - கவனிக்கவும், வருகைதந்த முகலாயர்கள் - இந்தியர்களின் விருப்பத்திற்கிணங்க தான் ஆட்சி புரிந்தார்கள். அதாவது கி.பி. 1526 நடைபெற்ற முதல் பானிபட் போர் எனபது, அப்போது டெல்லியை ஆண்ட மன்னன் இப்ராஹீம் லோடி என்பவனுக்கும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பாபர் என்பவருக்கும் நடந்தது. இந்த போரில் தான் முதன்முறையாக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன எனபது வரலாறு.
அப்போது டெல்லியை ஆண்ட இப்ராஹீம் லோடி என்பவரின் ஆட்சியை விரும்பாத மக்கள் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மன்னர் பாபரை அழைத்தனர். இதைதான் வரலாற்று புரட்டர்கள் முகலாய படையெடுப்பு என்ற நச்சுகருத்தை நமக்கு சிறுவயதிலேயே திணிக்கின்றனர்.அது படைஎடுப்பல்ல, அப்போதைய மக்களின் விருப்பம். அதனால்தான் பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதத்தில் கூட, பசுவை தெய்வமாக வணங்கும் மக்கள் நிறைந்த நாடு இது, எனவே பசுவை இறைச்சிக்காக அறுக்கவேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.படையெடுத்துவந
அதன்படி, பாபர், ஷெர்ஷா, ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜஹான், அவுரங்கசீப் என்று வரிசயாக இஸ்லாமிய மன்னர்கள் தொடர்ந்து - சொந்த விசயங்களில் அவர்கள் தவறானவர்களாக இருந்திருக்கலாம்..ஆனால் ஆட்சி என்று வரும்போது, அன்றைய மக்கள் விரும்பிய- நல்லாட்சிகளேயே வழங்கி வந்தனர். அது மட்டுமல்ல, பல்வேறு குட்டி குட்டி ராஜ்யங்கலாகவும், சமஸ்தானங்களாகவும், தமக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு பல்வேறு பிரதேசங்களாக இருந்த இந்த நாட்டை, இந்தியா என்ற ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது முகலாயர்களின் சாதனை.
அவுரங்கசீப் வரை அனைத்து மக்களின் நலனை கொண்டே எல்லாரும் ஆட்சி செய்த காரணத்தினால்தான், அவுரங்கசீப்பினால் தனது ராஜ்யத்தை தென்னிந்தியாவரை விஸ்தரிக்க முடிந்தது. அவர் ஒரு பரிபூரண இஸ்லாமியராக - கொள்கையுடன் வாழந்த காரணத்தினாலேயே இந்த வரலாற்று புரட்டர்களால், முகலாய மன்னர்களிலேயே மோசமானவராக சித்தரிக்கபடுகிறார்.அவர் இருக்கும்வரை கட்டுக்கோப்பாக இருந்த முகலாய சாம்ராஜ்யம், அவுரங்கசீப்பிற்கு பின்னர்தான் சீரழிந்தது. இறுதியில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட கொல்லப்பட்ட முகலாய கடைசி சக்கரவர்த்தி "ஷா" மன்னரின் ராஜ்ஜியம் அவரது அரண்மைக்குள்ளே மட்டும்தான் என்றால் பார்த்துக்கொள்ளவேண்டியது.
ஆனால் இன்று முகலாய மன்னர்களின் வாரிசுகள் யார், எங்கிருக்கிறார்கள் என்ற எந்த ஒரு சான்றும் எனக்கு தெரிந்து இல்லை என்றே நினைக்கிறேன்..(அப்படி இருந்தால் யாராவது தெரிவியுங்களேன்..பிளீஸ் )
முன்னூறு ஆண்டுகளுக்கும் இந்தியாவை ஆண்ட இந்த மன்னர்களின் வாரிசுகள் எங்கே சென்றார்கள்? அவர்களின் வாரிசுகதான் பழைய டெல்லியில் வசிக்கும் சாலையோர வாசிகளோ.? அதனால்தான் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு அடித்தட்டு மக்களைவிட மோசமான நிலையில் இருகிறார்களோ?
ஆனால்...
நாற்பதினாயிரம் மனைவிகளை மணந்து, ஒரு முனிவர் கொடுத்த ஏதோ ஒரு கனியின் மூலம் நான்கு மகன்களை பெற்ற தசரதன்...
நூறு பேர் கொண்ட படையை வென்ற ஐந்து பேர்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் -
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வைத்திருந்த மணிமேகலை
சாவே வராத நெல்லிக்கனியை தின்ற அவ்வையார்
தனது கன்றை கொன்ற மன்னனின் மகனை கம்ப்ளைன்ட் செய்த பசு மாட்டிற்காக (?) மகனை தேர் எற்றிகொன்ற மனுநீதி சோழன்
ஒரு குச்சியை வைத்தால் நின்று விடும் முல்லைக்கு விலை மதிப்புள்ள தேரை கொடுத்த பாரி
மயிலுக்கு குளிர் எடுக்கும் என்று போர்வை வழங்கிய பேகன்
கணவனுக்கு தண்டனை வழங்கியதற்காக மதுரையையே எரித்த கண்ணகி.
போன்ற புனைக்கதைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இங்கே - நம் நாட்டை பல நூறு வருடங்கள் ஆண்ட முகலாய சரித்திரத்திற்கு கொடுக்கப்படாமல் இருப்பது வரலாற்று மோசடி என்பதைத்தவிர வேறு என்ன இருக்க முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக