ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

(டிசம்பர் 01) சர்வதேசஎயிட்ஸ் விழிப்புணர்வு தினம்


இவ்வருடத்திற்கான எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் மையக்கருத்து : 'எயிட்ஸ் நோயாளர்கள் உலகில் பூச்சியமாதல்' எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று (டிசம்பர் 01) சர்வதேச எயிட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின் போது தாயிலிருந்து சேய்க்கு கடத்தப்படுதல் போன்ற பிரதான வழிகளில் எச்.ஐ.வி ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு தொற்றுகிறது. 


உலக சுகாதார அமைப்பினால், எயிட்ஸ் நோய் 'உலக பரவு நோயாக' அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 0.7% வீதமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


இந்நோய்க்கு இன்றுவரை முழுமையான மருந்து நிவாரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. 2010 ம் ஆண்டு எச்.ஐ.வி தொற்றினால் உலகில் பலியானவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியன். இது 2005ம் ஆண்டு உயிரிழந்தவர்களை விட 2.2 மில்லியன் குறைவாகும்.


2010 இன் புள்ளிவிபர முடிவுகள் படி உலகில் 34 மில்லியன் மக்கள் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ந்து வருகிறார்கள். இது 2001 ஐ விட 7% அதிகமாகும். இந்தில் இந்தியாவில் 2.3 மில்லியன் பேருக்கு எச்.ஐ.வி. தொற்றிருக்கிறது. 


ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் எச்.ஐ.வி தொற்றுடன் வாழ்ப்வர்கள் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.உலகின் எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களில் 68% வீதமானோர், ஆபிரிக்காவின் சஹாரா பாலைவனத்துடன் கூடிய தெற்கு நாடுகளில் (Sub-Saharan Africa) வசித்து வருகின்றனர்.  


எச்.ஐ.வி தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவோ அல்லது, முழுமையாக மீள்வதற்கோ இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதும், உயிரியல் விஞ்ஞானிகளின் அதற்கான தீர்வை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்கள். 


எச்.ஐ.வியை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர், தமது பரிசோதனைகளை எலிகளில் நிகழ்த்திய போது அனுகூலங்களான முடிவுகள் பெறப்பட்டதாக கூறுகிறார். 


இன்றைய எயிட்ஸ் தினத்தில் நீங்கள் என்னென்ன செய்யலாம்? 


1. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இலகுவில் புரியவைக்கும் சிவப்பு நிற எயிட்ஸ் அடையாள ரிப்பன்களை வாங்கி உங்கள் ஆடைகளில் பொருத்தி கொள்ளலாம். 

2. எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நடத்தும் சமூக அமைப்புக்களுக்கு நிதி உதவி வழங்கலாம்.

3. இதுவரை எயிட்ஸ் பற்றி கேள்விப்படாத ஒருவருக்கு இலகு மொழிநடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். 

4. இன்றைய நாளில் நடத்தப்படும் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, இந்நடவடிக்கைக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்கலாம். 

5. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லத்திற்கு சென்று நன்கொடைகள் வழங்கலாம். 

6. எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களது நீண்ட காலம் வாழ்வதற்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.  


முக்கியமானது

நீங்களும், உங்களை சார்ந்த நபர்களும், எச்.ஐ.வி தொற்றிருக்கிறதா என்பது தொடர்பில் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இன்றைய உலகில் எயிட்ஸின் நிலை ; புள்ளிவிபரம்



பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர் தனது எயிட்ஸ் ஆராய்ச்சி பற்றிய பரிசோதனை குறித்து.



இந்தியாவில் எயிட்ஸ் பற்றி என்.டி.டிவி



news : Source

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக