நம்ப முடியாத எத்தனையோ சாதனைகளை பார்த்தவர்கள் நாம்.. இங்கேயும் ஒரு சாதனை நிலைநாட்டப்படுகிறது பாருங்கள்.. ஐப்பானில் நிகழ்த்தப்பட்ட இந்த கின்னஸ் சாதனை சற்று வித்தியாசமானதும் எம்மை வியப்படைய வைப்பதுமாகும். ஆம்.. கால்களால் படிக்கட்டுக்கள் ஏறுவது சாதாரணம்… கைகளால் படிக்கட்டுக்கள் ஏறுவது கடினமான ஒரு விடயம். ஆனால் தலையால் படிக்கட்டுக்களை ஏறுவது???? எப்படி சாத்தியம்… நம்மை சிந்திக்க வைக்கிறதல்லவா?
-
-
-
தலை கீழாக நின்று எந்த வித பிடிமானமும் இல்லாமல் அதுவும் தொடர்ச்சியாக இரும்பு படிகளை தலையால் ஏறிக்கடக்கிறார் இந்த ஐப்பானிய இளைஞன். இச்சாதனை நிகழ்த்தப்பட்ட போது அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மொத்தமாக15 படிகளை தாண்டிய இவரது சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வியவைக்கும் இந்த சாதனை காட்சிகளை நீங்களும் ரசியுங்கள்.
விரும்பிப் பார்த்தேன். நன்றி நண்பரே!
பதிலளிநீக்கு