ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபிரிக்க குழந்தைகளுக்காக பிரான்ஸ் அர்ப்பணித்த பாடல்!


சோமாலியா, எதியோப்பியா என பல ஆபிரிக்க நாடுகளில் நிலைகொண்டுள்ள வறுமையினால், பல்லாயிரக்கணக்கானோர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர். சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பவும், 

அக்குழந்தைகளுக்கென நிதி சேகரிக்கவுமென UNICEF இனால், உருவாக்கப்பட்ட வீடியோ பாடல் இது. பிரான்ஸ் நாட்டின் 60 பிரபல இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த ஆபிரிக்க குழந்தைகளுக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். 



பாடல் வரிகள் புரிந்துகொள்ள கடினமாக உள்ள போதும், பாடல் இசையும், உருவாக்கப்பட்ட விதமும், கலைஞர்களின் உணர்வுகளும் நெகிழச்செய்கிறது. 


செம்மொழியாம் தமிழுக்கு உயிர்கொடுக்க எமது பாடகர்கள் ஒன்றிணைந்தது போன்று, இப்படி வறுமையில் பட்டினிச்சாவை எதிர்நோக்கியிருக்கும் இந்த தேசங்களுக்கும் ஏதாவது செய்யலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக