ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரயில்வே கஜானாவில் ரூ. 75 லட்சம் மட்டுமே உள்ளதாம்!

டெல்லியில் உள்ள ரயில்வே பவனிலிருந்து மம்தா பானர்ஜி வெளியேறி, கொல்கத்தாவில் உள்ள "ரைட்டர்ஸ் பவனில்" மேற்குவங்க முதலமைச்சராக பதவியேற்றுள்ள போதிலும், அவர் ரயில்வே அமைச்சராக இருந்த காலக்கட்டத்திலேயே, ரயில்வேயின் நிதி நிலைமை படுமோசமான நிலையை எட்டிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். 


ஒரு காலத்தில் 13,431 கோடி ரூபாய் கையிருப்பு என்ற அளவில் ரயில்வே கஜானாவில், ரயில்வேயின் நிதி நிலை நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்தது.ஆனால் லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்தே கஜானா கையிருப்பு சரிய தொடங்கி, இன்று வெறும் 75 லட்சம் ரூபாயிலிருந்து வந்து நிற்கிறது. 

சுதந்திரத்திற்கு பின்னர் ரயில்வே நிதி நிலைமையில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறும் அதிகாரிகள், நிலைமை இதே ரீதியில் சென்றால் எதிர்காலத்தில் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்கக்கூட தடுமாறும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்று கவலை தெரிவிக்கின்றனர். 

ரயில்வே மாநாட்டுக் குழுவிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையிலிருந்து கிடைத்த தகவலை பார்த்தால், கடந்த 2008 லிருந்து 2010 ஆம் ஆண்டு வரை ரயில்வேக்கு மாதம் ஒன்றுக்கு சராசரியாக 552 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அதாவது நாளொன்றுக்கு 18 கோடி ரூபாய் நஷ்டம்! 

ரயில்வே கஜானாவில் காணப்படும் இந்த வீழ்ச்சியால்,பல விரிவாக்க சேவை திட்டங்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றுக்கு செலவழிக்க பணம் இல்லாமல் இவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். 

இதே நிலை நீடித்தால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏற்பட்ட கதிதான் ரயில்வேக்கும் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்! 

1 கருத்து:

  1. ம்ம்ம்ம்..... இந்தம்மா வங்காளத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப் போறாங்க! கடவுள்தான் காப்பாத்தணும்.

    பதிலளிநீக்கு