ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2002 கலவரத்தின் வலியை நான் உணர்ந்துள்ளேன்: மோடி

எலே  நீ நல்ல நடிகனேள்ள 
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் வலியை தாம் உணர்ந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ந்ரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமைதி, சமூக நல்லிணக்கம் கோரி 3 நாட்களுக்கு உண்ணாவிரம் இருக்கப்போவதாக அறிவித்திருந்த மோடி, குஜராத் பல்கலை வளாகத்தில் இன்று காலை தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
உண்ணாவிரத மேடை முன் அமர்ந்து இருந்த தமது ஆதரவாளர்களிடையே பேசிய மோடி கூறியதாவது
:

உலகம் இன்று குஜராத்தின் வளர்ச்சியை பற்றி பேசுகிறது.அது தொழில் துறையாகட்டும், வேளாண்மை ஆகட்டும், கிராமப்புற, கல்வி அல்லது சுகாதாரத்துறை எதுவானாலும் குஜாரத்தை பற்றிதான் பேச்சு.

மேலும் குஜராத் மாநிலத்தின் நிர்வாக திறமை குறித்தும் உலகம் பேசுகிறது.குஜராத் மாதிரியான வளர்ச்சியைப் போன்றே அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் போன்றவற்றை பேணுவதிலும் குஜராத்தை சுட்டிக்காட்டி பேசப்போகும் நாளும் ஒரு நாள் வரத்தான் போகிறது என்று கூறினார் மோடி.

அதே சமயம் தமக்கு களங்கமாக இருக்கும் 2002 ஆம் ஆண்டு மதக்கலவரத்திற்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன்னிப்போ அல்லது வருத்தமோ தெரிவிக்காத மோடி, மனிதாபிமான அளவுகோலிலிருந்து குஜராத் ஒருபோதும் சறுக்கியதில்லை என்றார்.

"அந்த நேரத்தில் (2002) இந்த கலவரங்கள் ஒரு நாகரீகமடைந்த சமூகத்தில் நடக்கக்கூடாதவை என்று கூறியிருந்தேன்.அந்த நேரத்தில் கலவரத்தின் வலியையும், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் நான் உணர்ந்திருந்தேன். இப்போதும் கூட அந்த வலியை நான் உணர்கிறேன்.

1980 களிலிருந்து 90 ஆம் ஆண்டு வரை ஊரடங்கு, மதக் கலவரம் என தினசரி நிகழும் ஒரு நீண்ட பாதையை குஜராத் மாநிலம் கடந்துவந்தது.தற்போது அமைதியின் மதிப்பை குஜராத் மாநிலம் உணர்ந்துள்ளது" என்று மோடி மேலும் பேசினார்.  

1 கருத்து:

  1. தேர்தல் வந்தால் இவர்களுக்குத் திடீர் என்று அன்பும், பாசமும் பீற்றிக்கொண்டு வரும்.இந்து வெறியன் நான் என்று உண்மையைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டியது தானே !

    பதிலளிநீக்கு