ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சுற்றுச்சூழல்(பசுமை) கட்டிடக்கலை

இன்றைய நிலையில் உலக சுற்றுப்புற சுகாதாரம் பெருமளவு சீர்கெட்டு வருகிறது. கட்டிடங்களுக்காக பெருமளவில் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் உலகின் வெப்பநிலை அதிகரிப்பு, பூகம்பங்கள், பனி உருகுதல் உள்ளிட்ட மாபெரும் தீமைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த தீமைகளை ஓரளவு தணிக்கும் விதமாக, பசுமைக் கட்டிடங்களில்(Sustainable architecture) இன்று கவனம் செலுத்தப்படுகிறது. உலக வரலாற்றில் பசுமைக் கட்டிடங்கள் புதிதல்ல என்றபோதிலும், இந்த நவீன காலத்தில் அதற்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது. கட்டடக் கலைத் துறையில் நுழையும் விதம், சம்பளம் மற்றும் பசுமைக் கட்டடங்களால் விளையும் நன்மைகள் குறித்து இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது.
துறையில் நுழைதல்
இந்தத் துறையில் நுழைவதென்பது ஒரு திறம்பட்ட செயல்பாடாகும். இத்துறையில் லைசன்ஸ் பெற, கட்டடக் கலையில் 5 வருட படிப்பை முடித்திருக்க வேண்டும். B.Arch படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதி பள்ளி மேல்நிலைப் படிப்பு. இந்தப் படிப்பில் கணிதத்தையும் ஒரு பாடமாக படித்திருப்பதோடு, மொத்தமாக 50% மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இந்திய கட்டடக்கலை கவுன்சில் நடத்தும் NATA தேர்வையும் முடித்திருக்க வேண்டும். மதிப்பெண்களின் அடிப்படையில், பல்வேறு கல்வி நிறுவனங்களில், இப்படிப்பிற்கு சேர்க்கை அனுமதி கோரலாம். இளநிலைப் படிப்பை முடித்தப்பிறகு, M.Arch படிப்பிலும் சேரலாம்.
இத்துறையில் நுழைய முதுநிலைப் படிப்பு அவசியமில்லை என்றாலும், இன்றைய நிலையில், ஒவ்வொரு கட்டடக்கலை கல்வி நிறுவனமும் சுற்றுச்சூழல் கட்டடக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
எதிர்கால வாய்ப்புகள்
சுற்றுச்சூழல் குறித்து இன்று அதிகரித்து வரும் விழிப்புணர்வால், இத்துறை சார்ந்த கட்டடக்கலை படிப்பை முடித்த மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நிலங்களின் விலை இன்று உச்சத்தில் இருக்கும் நிலையில், மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளது. எனவே, அதிக விலைக் கொடுத்து நிலத்தை வாங்கினாலும், அதில் கூடுதல் செலவு செய்து பசுமை வீடுகளைக் கட்ட மக்கள் தயாராகவே உள்ளனர் என்று துறைசார்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.
பணி நிலைகள்
மேலே குறிப்பிட்ட 5 வருடப் படிப்பை முடித்தவுடன் ஒருவர், கட்டடக்கலை நிபுணர்களின் நிறுவனத்தில் பணிபுரியலாம் அல்லது நகர திட்டமிடல் துறைகள்(நகராட்சிகள், மாநகராட்சிகள், வீட்டுவசதி வாரியங்கள் மற்றும் பொதுப்பணித் துறைகள்), ரயில்வே துறைகள், பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பணியாற்றலாம். மொத்தத்தில், அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
சம்பளம்
நகர்மயமாதல், தொழில்மயமாதல், அனைத்துவிதமான தங்குமிடத் தேவைகள் போன்ற காரணங்களால், கட்டடக்கலை நிபுணர்களின் தேவை அதிகளவில் உள்ளது. சம்பளத்தைப் பொறுத்தவரை, ஒருவர் பணிபுரியும் நிறுவனம், அவர் ஈடுபட்டிருக்கும் திட்டம் ஆகியவவை சார்ந்து அமைகிறது. ஒருவரின் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை கிடைக்கிறது. கட்டடக்கலை தொடர்பான தனியார் கன்சல்டன்ஸி நிறுவனங்கள் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றன. இத்துறையில், ஒருவர் அனுபவம் பெற்றுவிட்டால் அவர் சம்பாதிப்பதற்கு குறிப்பிட்ட எல்லை என்று எதுவும் இல்லை.
இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
Jamia Milia Islamia University, Guru Gobind singh Indraprastha university, K.R. Mangalam school of architecture and planning, NMIMS university-Bangalore, School of planning and architecture - Jawaharlal Nehru architecture and fine arts university-Andrapradesh, Rizvi college of architecture-Mumbai, Sir J.J. college of architecture.
முக்கிய நன்மைகள்
பசுமைக் கட்டடங்கள்(சுற்றுச்சூழல் கட்டடங்கள்) இன்றைய காலத்தின் தேவைகள். இதுதொடர்பாக இந்தியர்களின் எண்ணங்கள் மாற வேண்டியுள்ளது. நம் நாட்டில் மாற்றங்கள் மெதுவாக நடந்துகொண்டுள்ளன. இதை இன்னும் விரைவுபடுத்த வேண்டியுள்ளது. இந்த பசுமைக் கட்டடங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மட்டும் உதவுவதில்லை, மாறாக, மீண்டும் பயன்படுத்த இயலாத பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்கிறது. மேலும், இந்தவகை கட்டடங்களுக்கு, சாதாரண கட்டடங்களுக்கு ஆகும் செலவைவிட 10 முதல் 15 சதவிகிதம் கூடுதலாக ஆகிறது. இது ஒன்றுதான் பெரிய தடை. அதேசமயம், இதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக