
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?
ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.
இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.
பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையான வெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.
ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக