
திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.என்.நேருவுக்காக, மு.க.ஸ்டாலினே மும்மரமாக தேர்தல் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்.
இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதை தி.மு.க. ஒரு பிரஸ்டீஜ் இஷ்யூவாகவே பார்ப்பதாகத் தெரிகின்றது.
“திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுக் கொடுத்தால், தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, ஸ்டாலின்தான் கட்சிக்கு தலைவர்
” என்பதாக ஒரு பேச்சும், ஸ்டாலின் ஆதரவாளர்களிடையே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
உட்கட்சி இழுபறிகள் பலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், கட்சித் தலைமையையே மாற்றும் ரிஸ்க்கை கருணாநிதி எடுப்பாரா என்பது சந்தேகமே.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் ஜெயித்தவர் மரியம்பிச்சை. எம்.எல்.ஏ.யாக பதவிகூட ஏற்காத நிலையில், அவர் அகால மரணம் அடைந்தார். தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த நேரத்திலேயே அவரிடம் தோற்றவர்தான் தி.மு.க.வின் தற்போதைய வேட்பாளர் கே.என்.நேரு.
அந்தத் தோல்விக்குப்பின், கே.என்.நேருவுக்கு அரசியலில் பெரிய எழுச்சி எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ளார். அப்படியான ஒரு குதிரையை வைத்துக்கொண்டு, ஸ்டாலின் எப்படி ஜெயிக்கலாம் என்று நினைக்கிறார் என்பதுதான் புரிரான விஷயம்.
“இறந்துபோன மரியம்பிச்சை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் ஜெயலலிதா, வேட்பாளராக நிறுத்தவில்லை. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தைப் புறக்கணித்ததோடு, சிறுபான்மைச் சமூகத்தையும் புறக்கணித்து, வேறு ஒரு நபரை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் ஜெயலலிதா” என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து அனுதாப வாக்குகளைப் பெறலாம் என்று நினைக்கிறது தி.மு.க.
அதை முயற்சித்திருக்கலாம், வேறு ஒரு தகுதியான வேட்பாளரை தி.மு.க. தலைமை களத்தில் இறக்கியிருந்தால்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக