ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குஜராத்:இன​ப்படுகொலைக்​கு உதவியதன் மூ​லம் மோடியிடம் ஆதாயம் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளி​ன் பட்டியல்


imagesCAZYZ0GI
புதுடெல்லி:மோடிக்கு எதிராக குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் சிறையில் வாடும் வேளையில் குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை நடைபெற்ற வேளையிலும் அதனைத் தொடர்ந்தும் மோடியின் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்றி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவிய ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அளித்தது பதவி உயர்வும், ஓய்வுப்பெற்ற பிறகும் பதவியில் நீடிப்பதற்கான அனுமதியுமாகும்.

பி.சி.பாண்டே(1970பாட்ச்):- 
இனப்படுகொலை நடைபெற்ற வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர். ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலை நிகழ்த்துவதற்கு உதவும் விதமாக போலீஸை செயலற்றதாக்கினார்.
1000 முஸ்லிம்கள் அஹ்மதாபாத்தில் கொல்லப்பட்ட வழக்கில் ஆதாரங்களை அழித்ததும், தொடர்ந்து நடந்த போலி என்கவுண்டர்களில் பங்கு வகித்ததும் நிரூபணமானது.
2004-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இவரை சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக நியமித்தது. இதற்கு எதிராக மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் உயர்நீதிமன்றத்தை அணுகினார். குஜராத் வழக்குகளின் விசாரணை பொறுப்புகளிலிருந்து நீதிமன்றம் பாண்டேவை நீக்கியது. பின்னர் 2004 அக்டோபரில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் டி.ஜி.பியாக பதவியேற்றார்.
2009ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பாண்டே குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டார்.
எ.கெ.பார்கவா(1967பாட்ச்):-
2004 பிப்ரவரியில் குஜராத் மாநில டி.ஜி.பி. 200 கோடி வருடாந்தர பட்ஜெட்டை கொண்ட குஜராத் போலீஸ் வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு கலவர வழக்குகளை மீளாய்வு செய்து தள்ளுபடிச் செய்ய முயற்சி மேற்கொண்டார். இவ்வாறு தள்ளுபடிச் செய்யப்பட்ட வழக்குகளில் பாந்தர்வாடா கூட்டு கல்லறை வழக்கும் அடங்கும்.
ஜி.சி.ராய்கார்(1972பாட்ச்):-
இனப்படுகொலை நடந்த2002 பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையே குஜராத் உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக அரசு நடத்திய ரகசிய கூட்டங்களில் பங்கேற்றார். இந்த கூட்டங்களின் மினிட்ஸ்(நிகழ்ச்சி நிரல் பதிவேடு)காணாமல் போயின. ஓய்வு பெற்ற பிறகு குஜராத்தில் போலி மதுபானத்தால் ஏற்பட்ட துயர சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் நீதி விசாரணை கமிஷனின் உறுப்பினரானார். இன்னும் பல பதவிகளும் வழங்கப்பட்டன.
எம்.கே.ராண்டன்(1976பாட்ச்):-
இனப்படுகொலை நடக்கும் வேளையில் அஹ்மதாபாத் மாநகர போலீஸ் துணை கமிஷனர். பின்னர் சூரத் ஐ.ஜியாக இட மாற்றம். 2005 ஜூலை மாதம் காந்திநகர் கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு. குல்பர்க் சொச்சைட்டியிலும், நரோடா பாட்டியாவிலும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலையும், பாலியல் வன்புணர்வு நடத்துவதற்கு வசதிகளை செய்துக் கொடுத்தார்.
தீபக் ஸ்வரூப்(1977பாட்ச்):-
2002-ஆம் ஆண்டு வதோதரா ரேஞ்ச் ஆபீஸர். வதோதரா ரூரல், கோத்ரா, தாஹோத், நர்மதா ஆகிய மாவட்டங்கள் இவருடைய அதிகார வரம்பிற்குள் இருந்தன. இவையெல்லாம் இனப்படுகொலையின் வேளையில் முஸ்லிம்களை ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலைச் செய்த இடங்களாகும்.
2005-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவியேற்றார். பெஸ்ட் பேக்கரி கூட்டுப்படுகொலையில் இவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. வழக்கிலிருந்து கஷ்டப்பட்டு தப்பினார். பின்னர் சூரத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்தார். தற்பொழுது 13 ஆம்ட் பட்டாலியனின் கூடுதல் டி.ஜி.பி பதவி வகிக்கிறார்.
கெ.நித்யானந்தன்(1977பாட்ச்):-
2001-2005 காலக்கட்டத்தில் உள்துறை செயலாளர். 2005-ஆம் ஆண்டு ராஜ்கோட் நகர போலீஸ் கமிஷனர் ஆனார். டி.ஐ.பி, கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு. இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து தவறான அறிக்கைகளை மத்திய தேர்தல் கமிஷன், தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் நீதிமன்றங்களுக்கு அளித்தார். தற்பொழுது போலீஸ் வீட்டு வசதிவாரிய மேலாண்மை இயக்குநர்.
ராகேஷ் அஸ்தானா(1984பாட்ச்):-
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிறப்புக் குழுவின் தலைவர். இனப் படுகொலையை நியாயப்படுத்த கோத்ரா ரெயில் எரிப்பு மிகப்பெரிய சதித்திட்டம் என்ற சித்தாந்தத்திற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியவர்.
2003 பிப்ரவரி மாதம் வதோதரா ரேஞ்ச் ஜூனியர் ஐ.ஜியாக பதவியேற்றார். தற்பொழுது வதோதரா நகர போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கிறார்.
எ.கே.ஷர்மா(1987பாட்ச்):-
மெஹ்ஸானா மாவட்ட எஸ்.பியாக பதவி வகித்தார். பின்னர் காந்திநகர் எம்.பி ஆனார். இனப் படுகொலையின் போது ஏராளமான குற்றங்களில் நேரடியாக பங்குபெற்றார். இவரை மாற்றாமல் தேர்தலை நடத்தமுடியாது என மத்திய தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து எஸ்.பி பதவியிலிருந்து மாற்றப்பட்டார். தேர்தலுக்கு பிறகு மோடி இவரை மீண்டும் எஸ்.பியாக நியமித்தார்.
ஸதர்புரா உள்ளிட்ட மெஹ்ஸானா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த கூட்டுப் படுகொலைகளுக்கு உதவி அளித்தவர் ஷர்மா. பின்னர் காந்திநகர் ஐ.ஜியாக பதவியேற்றார்.
சிவானந்த ஜா(1983பாட்ச்):-
2002-ஆம் ஆண்டு அஹ்மதாபாத் மாநகர கூடுதல் கமிஷனராக நியமனம். நானாவதி கமிஷனின் முன்பு மோடியை தப்பவைக்க வாக்குமூலம் அளித்தவர். 2005 பிப்ரவரியில் உள்துறை செயலாளர் ஆனார். அரசுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை தயார் செய்தவர்.
இனப் படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து விசாரிக்க ஸாகியா ஜாஃப்ரி அளித்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் குஜராத் அரசு சிவானந்தனையும் நியமித்தது. இவரின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து சூரத் ரேஞ்ச் டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.
சுதீர் கெ.சின்ஹா(1976பாட்ச்):-
2003 ஆம் ஆண்டு முதல் வதோதரா நகர போலீஸ் கமிஷனர். பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஷாஹிரா ஷேக்கிற்கு பணம் அளித்தும், மிரட்டியும் வாக்குமூலத்தை மாற்றச் செய்தததன் பின்னணியில் சின்ஹாவின் கரங்கள் உள்ளன.
2005 பிப்ரவரியில் சூரத் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். தற்பொழுது சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.

டி.ஜி.வன்சாரா(1967பாட்ச்):-
மோடிக்காக போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி புகழ் பெற்றார். மே 2002 முதல் ஜூலை 2005 வரை அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்ச் துணை கமிஷனராக பதவி வகித்தார்.
2005 ஜூலையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையின் டி.ஜ.ஜியாக பதவி உயர்வு பெற்றார். மோடிக்காக இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட ஏராளமானவர்களை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தார். தற்பொழுது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எஸ்.எஸ்.காந்த்வாலா(1973பாட்ச்):-
இனப் படுகொலைத் தொடர்பான 2000 வழக்குகளை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் கோல்மால் செய்து குஜராத் அரசுக்கு உதவிய அதிகாரி. சாட்சிகளை மிரட்டியும், அவமானப்படுத்தியும் வழக்குகளை பலவீனப்படுத்த முயன்றார்.
2004-ஆம் ஆண்டு மனித உரிமை மீறல் தொடர்பாக இவரை நீதிமன்றம் தண்டித்தது. எல்லா சட்டங்களையும் மீறி மோடி 2009-ஆம் ஆண்டு இவரை டி.ஜி.பியாக நியமித்தார். 2010 ஆகஸ்டில் ஓய்வு பெறவேண்டிய இவருக்கு 3 மாதங்கள் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டது.
ஜெ.மஹாபத்ரா(1974பாட்ச்):-
2002 செப்டம்பர் மாதம் முதல் குஜராத் மாநில கூடுதல் டி.ஜி.பி. அரசுக்கு ஆதரவாக ஏராளமான அறிக்கைகளை இட்டுக் கட்டினார். கொலைக் குற்றவாளியான குஜராத் அமைச்சர் அசோக் பட்டை பாதுகாக்க எஃப்.ஐ.ஆரில் பல்டியடித்து வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து அஹ்மதாபாத் நகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
2008-ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்ற பிறகும் மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் உறுப்பினரானார்.
ஒ.பி.மாத்தூர்(1975பாட்ச்):-
சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலைத் தொடர்பான ஆதாரங்களை அழித்தவர்களில் முக்கியமானவர். மோடியின் உறவினர். டி.ஜி.பியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற பிறகு குஜராத் செக்யூரிட்டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். பட்டமேற்படிப்பு மட்டுமே படித்துள்ள ஒரு அதிகாரிக்கு முதன்முறையாக உயர்வான பதவி அளிக்கப்பட்டது.

எ.ஐ.சயீத்(1978பாட்ச்):-
இனப் படுகொலையைத் தொடர்ந்து இழந்த முஸ்லிம்களின் ஆதரவை தேர்தல் காலத்தில் மீண்டும் பெறுவதற்கு மோடிக்கும், சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடைத்தரகராக செயல்பட்டார். கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பொறுப்புகளை வகித்தவர். ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.கவில் சேர்ந்தார்.

பி.பி.பாண்டே(1980பாட்ச்):-
இனப்படுகொலை நிகழ்ந்த உடனேயே அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் பொறுப்பை ஏற்றார். வழக்குகளை மூடி மறைப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
குல்பர்க்,நரோடாபாட்டியா வழக்குகளை தில்லு முல்லு நடத்தினார். அஹ்மதாபாத் மாநகர க்ரைம்ப்ராஞ்ச் தலைவராக பதவி வகிக்கும் வேளையில்தான் பெரும்பாலான போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. பின்னர் உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.
ஆஷிஷ் பாட்டியா(1985பாட்ச்):-
பி.பி.பாண்டேவுக்கு பிறகு அஹ்மதாபாத் மாநகர க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக பதவியேற்றார். டி.ஜி.வன்சாராவுடன் ஏராளமான தாக்குதல்களில் பங்காளியானார். உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் பாகமாக, ஆதாரங்களை அழித்த அதிகாரிகளை காப்பாற்ற முயன்றார். தெளிவான ஆதாரங்கள் இல்லாமல் பல வழக்குகளும் மூடப்பட்டதன் பின்னணியில் பங்கு வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக