தீபாவளி பண்டிகை 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்ய பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும், சிறப்பு ரெயில்களும் நிரம்பிவிட்டன.
24, 25 ஆகிய தேதிகளில் அரசு பஸ்களிலும் இடம் தீர்ந்துவிட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, செங்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய நீண்ட தூர விரைவு பஸ்கள் நிரம்பிவிட்டன.
கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றன. ஆனாலும் எல்லா ரெயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டன.
ஆம்னி பஸ்களிலும் இடமில்லை. தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்களுக்கு சிறப்பு பஸ்களை விட்டு கடைசி நேர கூட்டத்தை குறைக்க அரசு போக்குவரத்து கழங்கள் திட்டமிட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
இதேபோல் பல்வேறு பகுதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 100 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
இதுகுறித்து நிர்வாக இயக்குனர் மணி கூறுகையில்,
தீபாவளி முன்பதிவு பஸ்களில் இடம் நிறைந்துவிட்டது. வழக்கமாக செல்லக்கூடிய 850 பஸ்கள் தவிர கூடுதலாக 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இ டிக்கெட் முறையில் முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு இதுவரை சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 42 ஆயிரம் பேர் ஐ.டி. உருவாக்கி பாஸ்வேர்டு பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பொதுமக்கள் அலைய தேவையில்லை. காலம் விரயமாவது மிச்சமாகிறது என்றார்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்பட 7 போக்குவரத்து கழகங்களையும் சேர்த்து 1700 சிறப்பு பஸ்கள் தீபாவளிக்கு இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் 450 சிறப்பு பஸ்கள் விட திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், புதுச்சேரி, சிதம் பரம், திருப்பத்தூர், திருவண் ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படும் என்று நிர்வாக இயக்குனர் வி.பால்ராஜ் தெரிவித்தார்.
சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் கணேசன் கூறினார். பயணிகள் எவ்வித சிரமமின்றி பண்டிகையை கொண்டாட போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரப்படும் என்றார். கோவை போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு விடப்படுகிறது.
மதுரை போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, கோவை, திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை தவிர கூடுதலாக 250 பஸ்கள் விடப்படும் என்று நிர்வாக இயக்குனர், சாமிநாதன் கூறினார்.
கும்பகோணம் போக்குவரத்து கழகம் 200 சிறப்பு பஸ்களை தீபாவளி பண்டி கையையொட்டி இயக்க திட்டமிட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார்.
திருநெல்வேலி போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று நிர்வாக இயக்குனர் பால்ராஜ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக