ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபாசக் காட்சிகள் சதி செய்து சித்தரிக்கப்பட்டவையே! நித்தியின் பரபரப்புப் பேட்டி

செக்ஸ் சாமியார் நித்தியானந்தா இன்று சென்னையில் நீண்டகாலங்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு அருள் வழங்கினார்... சென்னை எழும்பூரில் உள்ள மெரினா டவர் ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார்...

அங்கு நித்தி முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

3-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக பொறுப் பேற்றுள்ள ஜெயலலிதாவை நானும் தியான பீடமும் வாழ்த்தி வணங்குகிறோம். அவரது வாழ்க்கை ஆனந்தமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நாளை மறுதினம் (ஜூலை 15-ந்தேதி) பெங்களூர் தியான பீடத்தில் மிகப்பெரிய ஆன்மீக ஆராய்ச்சி நடத்துகிறோம்.

இதில் உடல், மன வியாதிகள் குணமாவதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து இருக்கிறோம். இதை மீண்டும் ஒருமுறை மக்களுக்காக செய்து காட்ட இருக்கிறோம்.

இதில் பங்கு பெற்றால் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும். சில வினாடிகள் தலையில் இருந்து மேலே எழும்ப முடியும். இதில் எல்லோரும் பங்கு பெறுமாறு அழைக்கிறேன்.

என்னைப்பற்றி வெளியிடப்பட்ட வீடியோ காட்சி முழுக்க முழுக்க சித்தரிக்கப் பட்டது. பிரஸ்பாஸ் செய்து எடுக்கப்பட்டு ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வீடியோ மார்க்” செய்யப்பட்டது.

டி.வி.யில் காட்டப்பட்ட காட்சிகள் சோதனை கூடத்துக்கு அனுப்பியதில் அது உண்மை என்று சொன்னதாக தகவல் வந்தது. ஆனால் அந்த காட்சிதான் லேப் க்கு அனுப்பப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு வழக்கில் லேப் ரிப்போர்ட்டை கோர்ட்டு ஏற்கவில்லை. எனவே லேப் ரிப்போர்ட்டை உண்மை என்று கூற முடியாது. எனது சம்பந்தப்பட்ட வீடியோவும் அதுபோல்தான். என்னைப்பற்றி ஒளிபரப்பான வீடியோ சித்தரிக்கப்பட்டது. இது சதி செயல். பொய்யான தகவல்.

ஒருவேளை உண்மையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், இது ஒழுக்கம் சார்ந்த பிரச்சினை. இதை என் துறையில் உள்ள தியான பீடங்கள், பத்திரிகைகளை ஒழுங்கு முறையுடன் நடத்துகிறவர்கள் கேட்கலாம். தனி வாழ்க்கையில் தூய்மையானவர்கள், பொது வாழ்க்கையில் தூய்மையானவர்கள் கேட்கலாம். அது தவறு அல்ல.

நான் 3 பத்திரிகைகள், ஒரு டி.வி. உள்பட பல நிறுவனங்களை நடத்துகிறேன். 8 ஆயிரம் மணி நேரம் சொற்பொழிவு நடத்தி வருபவன். பத்திரிகையாளன் என்ற முறையில் சொல்கிறேன்.

வீடியோவை வெளியிட்டவர்கள் அவர்கள் செய்கிற சமூக விரோத செயல்களில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப மீடியாவை ஆயுதமாக உபயோகிக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் மிகவும் சமூக பொறுப்போடு நடந்து கொண்ட பத்திரிகைகளை குறை கூற மாட்டேன். சில பத்திரிகைகள், டி.வி.கள் சமூக பொறுப்புடன் செயல்பட்டன. எங்களை அழிக்க நினைத்தவை. சன் டி.வி. யும், நக்கீரன் பத்திரிகையும்தான். எங்களை குறை சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

பணத்துக்காக, சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா? என்னை பற்றி வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும் நக்கீரனில் தொடர்ந்து எழுதினார்கள். அந்த டி.வி.க்கும், உங்களுக்கும் என்ன பிரச்சினை என்று கேட்கலாம். எங்கள் ஆசிரம பக்தர்களை மிரட்டி நில அபகரிப்பு செய்துள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆசிரம சீடர்களை அடித்து உதைத்து பணம் பறித்து உள்ளனர். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுத்து இருக்கிறோம். யார்-யாரெல்லாம் பணம் கேட்டார்கள் பிடுங்கினார்கள் என்ற விவரத்தை கொடுத்து இருக்கிறோம்.

முதலில் ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார்கள். பின்னர் டிஸ்கவுண்ட் செய்து ரூ.60 கோடி தருமாறு மிரட்டினார்கள். எங்கள் சீடர்களை நாட்டை விட்டு ஓடும்படி கூறினார்கள். நான் ஒரு சன்னியாசி. அவர்களுடன் எப்படி மோத முடியும். நான் இப்போது சொல்கிறேன் எனக்கு எது நடந்தாலும் அந்த டி.வி.யும், வாரப்பத்திரிகையும்தான் பொறுப்பு.

நில அபகரிப்பு குறித்து புகார் கொடுக்க எங்களது பக்தர்கள் பயப்படுகிறார்கள். எங்களது பக்தர்களுடைய பணம் பிடுங்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. பணத்தை பிடுங்கி கொண்டு வீடியோவை வெளியிட்டார்கள்.

எங்களது 126 ஞானபீடங்களை அடித்து நொறுக்கினார்கள். எங்கள் மீது நடத்தப்பட்டது மததாக்குதல். எங்களது பெண் சீடர்களின் புடவையை உருவி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக