மொரீஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (( ரூ.10 தமிழில் ௧௦ =|= ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம். கன்னட, தெலுங்கு, மராட்டிய, பெங்காலி மக்கள் தங்கள் எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரீஷியஸ் அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீஷியஸில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக