ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மத கலவரத்தை தூண்டும்நக்கீரன் வார இதழை வன்மையாகக் கண்டிக்கிறோம்..

mpt-nakeeran1முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலையும் போட்டியிடும் வேட்பாளர்களை பற்றியும் இந்த வார நக்கீரனில் 39 ம் பக்கத்தில் ”முத்துப்பேட்டை – 13 ஆயிரம் ஓட்டுக்கு 13 பேர் போட்டி” என்ற தலைப்பில் இரா. பகத்சிங் என்ற நிருபர் எழுதிய ஒரு செய்தியினை வெளியிட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், நக்கீரன் வார இதழ் சார்பில் ”இந்துவா..? முஸ்லிமா..? முத்துப்பேட்டை தேர்தல் கள நிலவரம்” என்ற தலைப்பில் போஸ்டர்களை அச்சடித்து ஊர் முழுவதும் ஓட்டப்பட்டுள்ளது.


நக்கீரன்; வார இதழில் வெளியான செய்தியினை இணையத்தள வாசகர்களின் பார்வைக்காக..
முத்துப்பேட்டை – 13 ஆயிரம் ஓட்டுக்கு 13 பேர் போட்டி – திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி பேரூராட்சி முத்துப்பேட்டை இந்துக்களும், இஸ்லாமியர்களும் சம அளவில் உள்ள வளர்த்து வரும் நகரம் இது. கடந்த 2006 உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க கார்த்திகை சேர்மனாக்கிய சில இஸ்லாமிய சகோதரர்களை இனத்துரோகி என்று துண்டறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பிய பேரூராட்சி இது.
இப்போது திமுக தரப்பில் இஸ்லாமியாரான தமீம் என்பவருக்கே சீட் அறிவித்தது. ஆனால் இவருக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவில் ந.செ.அருணாசலத்திற்கு கட்சி மேலிடம் சீட் அறிவித்தது இதை கண்டு கொதிப்பான மாஜிக்கள் மைனூதீன், சேக் தாவூது ஆகியோர் தன் கட்சி வேட்பாளர் ஜெயிக்கக்கூடாது என்று களமிறங்கி களப்பணி செய்து வருவதுடன் போட்டிக்கு சில இஸ்லாமிய வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளார்கள்.
தேமுதிக கூட்டணிழயில் பத்மநாதன் கூட்டணியை நம்பி வேட்புமனு செய்து காத்திருக்கிறார். அதேபோல் பாஜக சார்பில் பேட்டை சிவகுமார் ”இஸ்லாமியர்களின் 6 ஆயிரம் ஓட்டுகளை 9 இஸ்லாமிய வேட்பாளர்கள் பங்கிட்டுக்கொள்ளும் போது இந்துக்களின் ஓட்டுக்களை மட்டும் வாங்கி வெற்றிக்கொடி நாட்டுவேன்” என்று தெம்பாக வலம் வருகிறார். முத்தரையர்கள், தலித்துகள் நிறைந்திருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை, அவர்களின் ஓட்டுகளே என்னை கரைசேர்க்கும் என்று முத்தரையர்கள் சங்கம் சார்பில் தீரன்ட என்பவர் சுயேச்சையாக களமிறங்கி முத்தரையர் தலித் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் ஆதரவு பெற்ற வேட்பாளர் எப்போதாவது ஊருக்கு வரும் எஸ்.டி.பி.ஐ. சார்பில் அபுபக்கர் சித்திக்கும், நான் தான் விடுதலை சிறுத்தை வேட்பாளர் என்று அப்துல் சலீமும் களம் கண்டுள்ள நிலையில் ஹாஜா மைதீன், லெப்பை தம்பி, முகமது மாலிக், மொய்தீன் அடுமை, சகாபுதீன் என்று மொத்தம் 13 ஆயிரம் வோட்டுகளுக்கு 13 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 9 வேட்பாளர்;கள் இஸ்லாமியாhகள் என்பதால் அவர்கள் 6 ஆயிரம் வோட்டுகளை பிரித்து கொண்டு நமக்கு வாய்ப்பு தருவார்கள் என்று இந்து வேட்பாளர்கள் தெம்பாகவே களப் பணி செய்கின்றனர்.
நக்கீரன் பத்திரிக்கையே.. உன்னுடைய செய்தியானது இஸ்லாமிய மக்களிடம் பல குழப்பங்களையும், பிரச்சனைகளையும் உண்டாக்கக்கூடிய அளவில் உள்ளது. அத்துடன் உனது பத்திரிகை சார்பில் முத்துப்பேட்டை முழுவதும் ஓட்டப்பட்ட நோட்டீஸானது மிகப்பெரும் பிரச்சனையினை உருவாக்கக்கூடிய அளவில் உள்ளது. உன்னுடைய பத்திரிகை பரப்பரப்பு செய்திக்கும், பரப்பரப்பு விற்பனைக்கு எங்கள் முத்துப்பேட்டை தான் கிடைத்ததா..? உன்னுடைய நிலையிலிருந்து கீழ் நிலைக்கும் உன்னுடைய சரிவிற்கும் நீயே.. ஒரு காரணமாக அமைய வேண்டாம்.. இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளவும் நக்கீரனே..
அபு ஆஃப்ரின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக