வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள முதல் பத்து இந்தியர்களை குறித்து வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். எதிர்பார்த்தது போல் இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர்
மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ் உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் 600 ஸ்டோர்களை நடத்தி வரும் இவரின் குழுமத்தில் 30,000 நபர்கள் பணி புரிகின்றனர்.
2. யூசுப் அலி – 1.75 பில்லியன் டாலர்
வளைகுடாவில் லூலூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வளைகுடாவில் லூலூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் இவரின் எம்கே குழுமத்தில் 30 நாடுகளை சார்ந்த 25,000 நபர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவை பூர்விமாக கொண்ட யூசுப் அலி அமீரகத்தை தலைமையகமாக கொண்டு தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3.பி ஆர் ஷெட்டி – 1.72 பில்லியன் டாலர்
கர்நாடகவை சார்ந்த பி.ஆர். ஷெட்டி குவைத் போரின் போது கிடைத்த ஏற்றுமதி ஆர்டரை வைத்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ஷெட்டி தற்போது நியூ மெடிக்கல் செண்டர் மற்றும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் இவரும் அமீரகத்தை மையமாக கொண்டு தொழில் நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4.சாப்ரியா குடும்பம் – 1.3 பில்லியன் டாலர்
அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் எவருக்கும் ஜம்போவை தெரியாமல் இருக்க முடியாது. மும்பையில் ரேடியா பாகங்கள் டீலராக இருந்த மனு சாப்ரியா தான் சோனி, நோக்கியா உள்ளிட்ட எலக்ட்ரிக் ஜாம்பாவான்களின் டீலர் ஆக விளங்கும் ஜம்போவை நிர்மாணித்தவரின். அவரின் மறைவுக்கு பின் வாரிசு பிரச்னை இருந்தாலும் அமீரகத்தின் மிக முக்கிய குழுமம்.
5.பி.என்.சி.மேனன் – 1.2 பில்லியன் டாலர்
கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்கு சென்று பார்டனருடன் இண்டீரியர் நிறுவனத்தை ஆரம்பித்தவர். ஓமனில் ஆரம்பித்தது போன்று பெங்களூரில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கலக்கிய மேனனின் நிறுவனம் ஓமனின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று.
6.சன்னி வர்கீஸ் – 950 மில்லியன் டாலர்
கேரளாவை சார்ந்த சன்னி வர்கிஸ் தொடக்கத்தில் ஆரம்பித்த ஒற்றை பள்ளியை இன்று 11 நாடுகளில் 1 இலட்சம் மாணவர்கள் படிக்கும் 100 பள்ளிகளாக ஜெம்ஸ் நிறுவனம் வியாபித்திருக்கிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சையில் அடிபட்டாலும் பத்மஸ்ரீ விருது வாங்கிய சன்னி வர்கீஸ் வளைகுடாவில் கல்வி சேவையில் முக்கிய நபரே.
7.ராஜன் கிலாசந்த் – 900 மில்லியன் டாலர்
மும்பையில் 60 வருடங்களுக்கு முன் டோட்ஸல் குழுமத்தை ஆரம்பித்த ராஜன் கிலாசந்த் இன்று தன் குழுமத்தை எஞ்சினியரிங், கனிம வளம், வர்த்தகம் போன்றவற்றில் மத்திய கிழக்கில் முக்கிய ஒன்றாக நிறுவியுள்ளார்.
8.டோனி ஜாசன்மால் – 900 மில்லியன் டாலர்
ஈராக்கில் 1919ல் ஒரு சிறு கடையாக ஆரம்பித்த ஜாசன்மால் அமீரகத்தில் இன்று பரிச்சயமான கடைகளில் ஒன்று. வீட்டு பொருட்கள், பிரிண்ட் மீடியா என்று பல்வேறு பொருட்களின் பிரத்யேக டீலராக விளங்கும் ஜாசன்மால் 5 நாடுகளில் 100 ஸ்டோர்களை வைத்துள்ளது.
9.பகாரானி – 820 மில்லியன் டாலர்
1944ல் தென் ஆப்பிரிக்காவின் தொடங்கப்பட்ட சோய்த்ராம் இன்று அமீரகத்தை அடிப்படையாக கொண்டு 25 கடைகளை கொண்டு மிகப் பெரிய ரீடெய்ல் ஜாம்பாவானாக திகழ்கிறது
10. டாக்டர் முஹமது அலி – 725 மில்லியன் டாலர்
பட்டியலில் உள்ள 10 பேரில் 2 வது ஓமனை சார்ந்தவரான முஹமது அலி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அவர் ஆரம்பித்த கல்பார் எஞ்சினியரிங் மற்றும் காண்டிராக்டிங் நிறுவனத்தில் சுமார் 27,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக