மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றவுள்ள தேசிய விளையாட்டு மசோதாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகளையும் கொண்டு வர முடிவெடுக்கப்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ. இந்த மசோதா பி.சி.சி.ஐ.,யை கட்டுப்படுத்தவே நிறைவேற்றப்பட உள்ளதாக குற்றம்சாட்டியது.
இந்த மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு பி.சி.சி.ஐ., சட்ட மசோதாவில் சேர்க்கப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வந்தாகவேண்டும்.
இந்த மசோதாவில், விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவியில் உள்ளவர்களுக்கு வயது 70க்குமேல் இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளுக்கு மேல் வகிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐ.சி.சி., தலைவராக உள்ள சரத்பவார் மத்திய விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக உள்ளார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக உள்ள விலாஸ் ராவ் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார்.
மேலும் இந்த மசோதாவில், பி.சி.சி.ஐ., வந்தால், இந்திய கிரிக்கெட் அணியும், மற்ற விளையாட்டு வீரர்களை போல் போதை தடுப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். இந்திய அணி வீரர்கள் சர்வதேச போதை மருந்து தடுப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா குறித்து பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான், விளையாட்டுத்துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதனை தேசிய விளையாட்டு மசோதா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை முடிந்து விட்டது. இந்த மசோதா நாளை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக