மன்னார் சாந்திபுரம் வீதி சௌத்பார் கடற்கரையில் இன்று காலை இந்திய மீனவர் ஒருவருடைய சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க மீனவர் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது. சௌத்பார் கடற்கரைக்கு தொழிலுக்குச்சென்ற மீனவர்கள் சடலத்தினை கண்டு அருகில் உள்ள கடற்படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், மன்னார் நீதவான் திருமதி கே.ஜீவரானி சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து சடலத்தினை பார்வையிட்டார். இதன் போது சடலம் பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட போது குறித்த நபர் அணிந்திருந்த ஆடையில் இருந்து இந்திய நாணயமும், இந்திய தீப்பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தினை பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக