ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கலாநிதிமாறன் மீது புகார் கொடுத்த கேபிள் டிவி அதிபர் திடீர் மரணம்


கடந்த வாரம் ராமநாதபுரத்தை சேர்ந்த கேபிள் டிவி சங்கத்தலைவர் மான்மொம்பு நாகராஜன், தன்னை கலாநிதிமாறனும், மதுரை வைகை டிவி உரிமையாளர் சரவணனும், மற்றும் முன்னாள் மதுரை முன்னாள் உதவி உளவுத்துறை கமிஷ்னர் ரஜினிகுமாரவேலு ஆகியோர் மிரட்டி தனது கேபிள் டிவியை எழுதி வாங்கியதாக புகார் கொடுத்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ரஜினிகுமாரவேலுவிடம் நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின என்று கூறப்பட்டது. இதையடுத்து கலாந்திமாறன் மீது நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று திடீர் என்று மான்கொம்பு நாகராஜன், மாரடைப்பினால் இறந்துவிட்டார். மாரடைப்பு ஏற்படுவதற்கு வேறும் எதுவும் காரணமா என்று மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக