ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மம்முட்டி - மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்... வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி!


 
பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் சில சந்தேகத்துக்கிடமான நபர்களுடன் இருவரும் தொடர்பு வைத்திருந்ததே இந்த சோதனைக்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

இந்த நபர்கள்தான் இப்போது இந்திப் பட உலகையே ஆட்டுவிக்கிறார்களாம். நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய கொண்டுள்ள இந்த நபர்கள், மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தொடர்பிலிருப்பது துபாயில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு தெரிய வர, உடனடியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
மேலும் இந்த நிழலுலக நபர்களுக்கு தங்களின் படங்களின் செயற்கைக்கோள் உரிமையை வழங்கவும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம். இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணம் மும்பையில் ஏற்கெனவே ஐடி துறையின் சந்தேகப் பார்வையில் உள்ள சிலர் மூலமே மம்முட்டி-மோகன் லாலுக்கு வந்துள்ளது. இன்னொரு பக்கம், மம்முட்டியும் மோகன்லாலும் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், கணக்கில் காட்டுவது அதிகபட்சம் ரூ 80 லட்சம்தானாம்.
இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த பிறகே இவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியதாம் வருமான வரித்துறை. இந்த சோதனை, அதன் காரணங்கள், பிடிபட்ட பொருள்கள் குறித்து விரைவிலேயே முழு அறிக்கை வெளியிடவிருக்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, மம்முட்டிக்கும் மோகனலாலுக்கும் மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக