கராச்சி: கராச்சியில் இந்த ஆண்டு 800 பேர் இறந்துள்ளனர் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முக்கிய நகரான கராச்சியில் 95ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டுதான் மிக அதிக அளவில் இன மோதல்களும், அரசியல் வன்முறைகளும் நடந்துள்ளன. இதில் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் ஆணைய தலைவர் ஜோஹ்ரா யூசுப் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு கடந்த 7 மாதங்களில் வன்முறைகளுக்கு 800 பேர் பலியானது கவலை அளிக்கிறது. இதனால் சட்டத்தை பின்பற்றும் பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 6 மாதங்களில் கராச்சியில் 500 பேர் பலியாகி இருப்பதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏராளமான போலீசார் கராச்சியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக